அவர் தான் பெரியார்
மானமிழந்த மக்களையும் சிந்தை பொருத்தி சிரசுயர செய்த சீர்திருத்தவாதி பெரியார் ஆரிய மண்ணின் வீரியம் அறுத்து திராவிடம் காத்த தலைவர் பெரியார் ஜாதி களங்கம் களைத்து கலப்பு மணங்கள் அமைத்து - ஓர்யுக களம் கண்டவர் பெரியார் சிகை நகை கண்டு மயங்கிய மகளிருக்கும் மானம் புகுத்தி பட்டபடிப்பும் அதற்கோர் பணியும் பெறுதல் நலம் என விடுதலை விதைத்தவர் பெரியார் சாஸ்திரமும் சம்பிரதாயமும் அகத்தின் ஆக்கபூர்வ சக்தியின் முட்டுக்கட்டையன மூடநம்பிக்கை முடங்க செய்தவர் பெரியார் அகரம் அளித்த அறிவு கொண்டே அணைத்தையும் பகுத்துணர்வோம் திராவிட வழியினுடே தேசியம் காப்போம்