இடுகைகள்

best tamil poems லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

மிதிப்போம் மிதிவண்டி

படம்
  காலச்சக்கரம் சுழல்கிறது புதியதொரு விடியலை காண பழையனவென கழித்ததெல்லாம் பகட்டாய் நம் வாழ்வியலில் படர்ந்தோடுகிறது மீண்டும், மீண்டும் மீண்டும்.   அதில் இன்று மின்சார பொறிபோல் அகம் கொண்டது இந்த மிதிவண்டி.   காலச்சக்கரம் தம் பாதையை பின்னோக்கி   மிதிக்கிறது சற்றே மதிக்கிறது   கண நேரத்தில் கடந்து சென்ற சொகுசு வாகன சுகவாசிகளையும் சற்று வியர்வை குளியலில் நனைத்திருக்கிறது மிதிவண்டி   புல்லட்டு ஏறி பூவனம் சுற்றிய புன்னகை அரசர்களையும் பொற்பாதம் கொண்டு மிதிவாங்கி கொண்டது மிதிவண்டி   எரிபொருள் ஏற்றதில் சிற்றம் கொண்ட சிறார் சிலரை   சிந்திக்க செய்து     சிந்தை சக்கரத்தின் பாதையை சற்று தன் வசம் திருப்பி உள்ளது மிதிவண்டி   இனி சாலைகளில் சில சுழற்சிகள் புதுமையில் சுழலவிருக்கின்றன   ஒய்யாரமாய் ஓய்வெடுத்த ஓவிய பாதங்களும் ஒழுகவிருக்கின்றன வேர்வை கசிவில், கசியட்டும் சில காலம்     கருத்துடனே   காலங்கள் எம் கண்மணிகளுக்கும் கண்ணின் மணிகளுக்கும் காதலை தந்து போகட்டும் கால்களுக்கும் கட்டைகளுக்

மானுட இச்சை

படம்
மானுட பயலாய்  மண் சேரும் உயிரெல்லாம்  மனம் கொண்ட மாந்தரின்  இச்சையே       மண் சேர்ந்த பின்னே  மழலையில் மனமகிழ மரப்பாச்சி பொம்மையில்  இச்சை  மண்தொட்ட பின்பு  கண் கண்ட தூரம் வரை கால் சுற்ற  இச்சை  நாக்குளரலில் நான்கு சொல்  நா விட்டு போனால்  நாலந்தா முதல்  நாசா வரை சேர்க்க  நம்மை  தந்தோருக்கு  இச்சை  நால்வர் கூட்டம்  நட்பில் கொண்டால்  குட்டி குறும்பாய்  அரும்பிட  இச்சை  கதையும் கணக்கும் கருத்தில் கொண்டு  சிறு மதிப்பெண் கூட்டி   சிரசு உயர் கொள்ளவும்  சிறு நேர இச்சை  பட்டம் பெற்று பல திட்டம் தீட்டிட  தினம் கல்லூரி  கல்வியியை கற்றிட இச்சை  கடை கல்லூரி  காலம் கழியும்  கணத்தினுள்  காதல் பேரில் –சில  காலம் கொண்டிட  இச்சை  சித்தம் தெளிந்து  சில சில்லறை  சேர்க்க புது  செய்கைகள்  செய்திட   இச்சை  செய்கையின்  சேர்க்கையில் சேர்த்த சில்லறை  சிலிர்ப்பில் புது  சிநேகம் ஒன்றை  காதலாய் கொண்டிட இச்சை  கொண்ட காதலை  கொண்டு செல்லும் காலம் வரை  கரம் பற்றி  காத்திட  இச்சை  காதல் களிப்பில்  கூடி திரிந்து  குவளை கொண்டு  திரு பல தந்து  கூட்டி திரிந்து  கூடு சேர்த்திட   இச்சை  கூட்டில்  குயில்கள்  கூடி திரியும்  க

மகளை பெறும் மகராசன்

படம்
மனங்கொண்டவள் மணமேடை கண்டபோதே  மாகளிம்பும் மனதில் குடிகொண்டது  குடைகூலி குடுக்காமலே ;  குலவிக்காக கலவி செய்து  காத்திருந்த கனமெல்லாம் காதலியின் கதைப்புகள் தன்   கரு கொண்ட திரு ஒற்றியே ; கண்ணனோ ? அவள் காதலியோ ? என  காத்திருப்புகள்  புதிர்கொள்ள செய்தன. மனங்கொண்ட மகராணி  மாதவனை தன் வசம் அழைத்து  வம்சத்தின் வசம் சேர  வயிறு கொண்டது  வள்ளுவனோ ? வாசுகியோ ? என மொழி வினாவினாள் ; ஓவியனோ  வரையோலையை  வசம் இழுத்து வாசம் பிடித்து  உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்து  வரையோலை வயிறு கொண்டது  வாசுகின் வரவிற்கென  வாஞ்சை கொண்டான். காகிதத்தில் தமிழ்  கருத்தளங்கள்  கொணர்ந்து கொட்டும் கவிஞனே, வாசுகியின் வசம் வாஞ்சை கொண்டு  வரம் தரும் என்  வள்ளுவனே,  ஆண் மகவு கொள்ளும்  ஆவல் கொள்ளாது  தையலை உனக்கே  உரித்தாகும்  விந்தை கூறு. என் சிறந்தவளே, தோழியே, நின் தசையில் ஓடி  வித்தில் கலந்து  விண் செல்லும்  வினை செய்யோள் வரம் தேடும்  விந்தை சொல்வேன்  கேளாய்  நின் வரவை  நித்தம் நித்தம் தம் சிந்தையிற்கொண்டு  கர்வம் கொண்ட  உந்தையின்  உளறல்  கேட்டிருப்பாயோ ? மகவென  மகளை கொண்டு  அமுதூட்டி  அன்பு செய்து  ஆர்பரித்து  உயிர் உலாவி 

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து  மொழி பகிர்ந்தாலும்  மனம் கோனாது-நீன்  மைய்யலில் மைய்யம் கொண்டிருப்பாய். பூவே இன்னுமும்  சொல்வேன் கேளாய் , இந்த பூ புவியில் பூத்தது புலம் பெயரவும்  மனம் பகிரவும்

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

நட்பின் நாட்டியங்கள்

படம்
அயலானாய் அகர கூடத்தில் அமர்ந்திருந்தேன் இது நானோ   ? இல்லை இதிகாச பிதற்றலோ ? என மன இல்லமெல்லாம் சிந்தை பின்னல்கள்- பின் இல்லை என தெளிவுற்று இனியவரை இனம் காண இனித்தேன் ;   கண்டேன் கன்னி ஒருத்தியை கவி பாரதியின் கன்னியோ இவள் என என்னுள் கதைத்தும் கொண்டேன் , காலங்கள் கலாய்ப்பாய் கரைதல் கண்டு யானும் கலைந்து கலாய்த்தோர் வசம் கலந்தேன்   தாடிக்காரன் சீண்டல்கள் சில நேரம் சீற்றம் கொள்ள செய்தாலும் –அவன்   நற் சிந்தை கொண்டு இணங்கி பிணைந்திருதேன்   அச்சிந்தை சில அன்பர்களை நண்பர்களாய் இனம் கண்டு தந்தது.   இப்படியும் மாந்தர் இருப்பரோ மாநிலத்தில் என நினனக்கும் பொறுத்து அவர்தம் வினைகள் விந்தயாகியது.   நட்பிற்கும் கலங்கும் கண்ணன், பாசத்தில் பீச்சிடும் பச்சிளங் குழந்தை, குளிருக்கு மூட்டிய தீ போல் குறும்புகளால் மனம் கொண்ட மாந்தன், சிரிப்பில் தன் குறிப்பெழுத சிலிர்த்த சினை கண்ட சிங்காரி, ஊண் சோற்றிற்கு உமிழ் நீர் சுரக்கும் சுந்தரி , லொள் என்ற நாய் குறைப்பின் ஞொயத்தில் தாய் விளிக்கும் தமிழ் தந்த ஆங்கில மொழி     திருத்

பாரதி செய்வோம்

படம்
எட்டயபுரத்துகாரன் ஆனால் இவன் எண்திசைக்கும் சொந்தக்காரன்; கதைகளிலும் க விதைகளிலும் தமிழர் நெஞ்சில் தமிழ் விதை விதைத்தான்; தையலை தனக்கென்றே கொள்ளும் நிலை மாற்றி தையலின் தரம் போற்றி தரணி ஏற்றி ஓர் தவ புரட்சி செய்தான்; அன்னியமாய் தனித்து நின்ற ஆண்டிகளையும் ஒன்றிணைத்து ஒன்றியமாய் ஓங்கி நின்றான்; வெள்ளைத்தாளில் வேல் பாய்ச்சி வெள்ளயனை களம் கண்டான்; களம் கண்ட கலியுகத்துக்காரன் காளியையும் விட்டு வைத்ததில்லை, உன்னை நினைக்கும்  நிலை துறந்து என்னை நினைக்கும் நாத்திகம் ஏற்பேன் என எச்சரித்தான்; களம் கண்ட கலியுகத்துக்காரன் களிறேற காலம் கடந்தான் காட்டுத் தீ வளர்த்தே; அத்தீயினுடே தீந்தமிழ் வளர்ப்போம் தீராவிடம் காப்போம் வீட்டுக்கொரு பாரதி செய்வோம்