இடுகைகள்

தமிழ்கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிதிப்போம் மிதிவண்டி

படம்
  காலச்சக்கரம் சுழல்கிறது புதியதொரு விடியலை காண பழையனவென கழித்ததெல்லாம் பகட்டாய் நம் வாழ்வியலில் படர்ந்தோடுகிறது மீண்டும், மீண்டும் மீண்டும்.   அதில் இன்று மின்சார பொறிபோல் அகம் கொண்டது இந்த மிதிவண்டி.   காலச்சக்கரம் தம் பாதையை பின்னோக்கி   மிதிக்கிறது சற்றே மதிக்கிறது   கண நேரத்தில் கடந்து சென்ற சொகுசு வாகன சுகவாசிகளையும் சற்று வியர்வை குளியலில் நனைத்திருக்கிறது மிதிவண்டி   புல்லட்டு ஏறி பூவனம் சுற்றிய புன்னகை அரசர்களையும் பொற்பாதம் கொண்டு மிதிவாங்கி கொண்டது மிதிவண்டி   எரிபொருள் ஏற்றதில் சிற்றம் கொண்ட சிறார் சிலரை   சிந்திக்க செய்து     சிந்தை சக்கரத்தின் பாதையை சற்று தன் வசம் திருப்பி உள்ளது மிதிவண்டி   இனி சாலைகளில் சில சுழற்சிகள் புதுமையில் சுழலவிருக்கின்றன   ஒய்யாரமாய் ஓய்வெடுத்த ஓவிய பாதங்களும் ஒழுகவிருக்கின்றன வேர்வை கசிவில், கசியட்டும் சில காலம்     கருத்துடனே   காலங்கள் எம் கண்மணிகளுக்கும்...

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

மாந்தரின் மாந்தர்கள்

படம்
உயிர் உய்ய ஊண் மருவி  உடல் சேரும் உறவுகளே மருந்தென்போம் –   அவ் உறவுகளின்    உருத்தரிந்து உயிர்நாள்   உய்விக்கும் உலகத்தின் நாயகர்கள் இவர்கள் பிணி பல   பிணைந்திடினும் பிரியமுடன்   முன் வந்து பிணி நீக்கி வினை செய்யும் விந்தையர்   நம் மருத்துவர்கள் பிண்டமாய் பிறப்பெடுக்கும் பிறவிகளை பிரசவம் செய்து பிருதிவி கொணரும் பிரியர்கள் நம் செவிலியர்கள் ஞாலத்தில் ஞாபகம் கொண்ட நாள் முதலும் கண்டதில்லை   இப் பெருநோயை கொள்ளை நோய் கண்டாலும் கலங்காது களப்பணி கண்டு வரும் கருணைமிகு காவலாளிகள்   நம் கலைஞர்கள் ஆம் கலைஞர்கள்தான். சினை கண்ட   தாய்க்கெல்லாம் சிதையாது சிலை வார்க்கும் சிந்தை கொண்ட மாந்தர்களை கலைஞரென கதைக்காமல்   வேறென்ன கதைப்பது ? கதைப்போம்   இக் களப்பணி வீரர்களையும் கலைஞர் என்றே நாவினிலே   நளபாகத்தின் நாட்டியத்தை மீட்டெடுப்போரை. வாழ்த்தியும் வணங்கியும்.