ஏறு தழுவுதல்




பொங்குக பொங்கல்
பானையிடத்து மட்டுமல்ல
போற்றி காத்து போர்த்தமிழ் வழி வந்த
சேனை இடத்தும் தான்
மனிதருக்குண்டே மாநேறி காத்து
மாதவம் செய்தே வாழ்வான் தமிழன்;
அந்நெறி குன்றா
அறச்செயல் அமைத்தே 
ஆண்டு வாழ்வான் தமிழன்;
பேறுதற் பிறப்பாய்
அன்னை கொடி வழி கொணர்ந்தே
ஞான கோலமிட்டவன் தமிழன்
அவள் பால் உண்டே
வழி வழி வந்தோன்
பிழை இழைத்திடுவானோ - ஒரு
பழி சுமந்திடுவானோ 
கோ மாதா பசுகளையும் 
அதன் திசுகளையும்
கலசம் ஏற்றி 
களிம்பு காண்பான் தமிழன்
வீரத்தின் ஊற்றாய் அன்பின் ஊற்றாய்
சீறி பாயும் ஏறு தழுவுதல்
சிறப்பே!
சிரசுயர்ந்த
சிந்தை கொண்டே
சிந்து இனம் காக்கும் 
சீவன்கள் தானே
என் இனம் காக்க
ஏறு தழுவ
சீறி வரும் சிந்தினமே வா !
உன் திமிலில்
என் இதழ் இணைந்து
இறுமாப்புரைப்பேன்  வா !
என் தமிழினம் காப்பேன் நான்..

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்