மகள்
பாரதி வேணும்
கலியுகத்தின்
கவுச்சி நீங்க ஒரு
கன்னியாய் வேணும்
சொப்பில் சோம்பல் முறிக்கும்
சுகம் துறந்து
சூத்திரத்தின் சூழ்ச்சி
அவிழ்க்கும் சுறுசுறுப்பு வேணும்
அது சிறு பூவாய்யும் வேணும்
அவள் கீர்த்தி பெற
அவளின் கீழாய் கீழாய்
நான் நானாய் கொஞ்சம் அவளாய்
அவளின் மழலை கடலில் நீந்தி
என் முத்தை நான் முந்தியெடுக்க வேணும்
அன்னம் சிதறி உண்ண மறுக்கும் அவள்
அன்ன நடைக்கு என் நடை இணை செய்யணும்
அன்ன சாலைகளும்
அண்ணா சாலைகளும் கடந்து
அவள் அனைவர் பட்டம் பெற வேண்டும்
அது முனைவரிலும் பண்பட்டது
என் கைவிரிப்பில்
அவள் உலகடைக்க வேணும்
அவள் உலகடைப்பில்
நான் கைவிரிக்க இயலாது
மகாகவி கடலில்
மாண்புற நீந்தி கடந்தவள்
கண்களில்
கானல் அனல்
கொப்பளிக்கும்
தேடல்கள் வேண்டாம் - அவை
தேவதையிலும் தென்படும்
காலம் மிகுந்தால்
கானல் காலனாய் மாறும்
சுட்டெரிக்கும் தீ - என்
சுட்டெரிக்கும் தீ என்றும்
சுடர் தரும் தன்
சுற்றத்திற்கும்
சுகம் பெற
நலம் வாழ
கருத்துகள்
கருத்துரையிடுக