மாதரை போற்றுவோம்
உதிரத் துளிகள் உலகிற்கு உவகையை தந்த வண்ணம் உள ; செவி தொடும் மழலை சொற்கள் குழலையும் யாழையும் ஏறிட்டு பார்க்க வைப்பதில் பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும் மெய் உரசல் எல்லாம் உயிர்மெய்யை எல்லா காலத்திலும் தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும் அமைத்தவன் செயலே, அதை உணராது மாதர் மனம் நோக மாமொழி வசைகள் எதற்கு ? புவி சேரா பிண்டத்தை பிழையென சூட்டும் பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா மாந்தரும் மாந்தரேயென மாநெறி காத்தல் - நம் மாண்பிற்கு அழகு மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும் அவர் தம் மனங்களையும் .