வாழ்வின் நோக்கம்



நாதம்  நிறைந்து
வித்தாய் ஊற்றெடுக்கும் பிறப்பில்
இருபத்தி மூன்றாம்  நிறப்புரி  இணைவில்
ஈருடல் ஓருயிராய் தரித்து
உதிரத்தை உணவாய் கொண்டே
உரம் பெற்று
உலகறிய வான் பறந்து
கலப்பை  சுமந்தே
காடு சென்று
கதிர் அறுக்கும் கலைஞர்கள் நாம்.

களை அறுத்தலும்
வினை திருத்தலும்
ஞால பயனெனக் கொள்க
காலம் செல்ல
காதல் கொள்ளக்
கலவி செய்யக்
கண்கள் கொள்வோம்
கருத்துடனே,
உயிர் உய்ய,
ஊண் கொள்ள,
ஊண் சமைப்போம்
உலகத்திற்கே- ஓர்
கவளம்
காதலுடன்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்