மழலை


மழலைகள் மலைக்கணக்கில்
மண் சேர்ந்து வருகிறார்கள்
மண்ணும் மனம் சோராது
மணம் தந்தே கனம் கொண்டு,
வானும் அஃதே;
இங்கு இன்னல்கள் யாவும்
இடைதரகரிடத்தே
பொக்கை வாய் குழந்தையிடம் 
பொற்தமிழ் பொருத்தும் 
விந்தை மானுடர்கள் 
மண்தவளும் முன்னே 
மழலை கல்வி 
மாண்பின்றி மக்களிடத்தில்;
மண் அணைத்து, 
மனம் அமைத்து, 
மணம் முகர்ந்து,
மகிழ்வுற இன்று 
மணித்துளிகள் இல்லை, 
மாறாய்., 
மார்த்தாண்டன் தோன்றும் முன்னே 
மறைகிறார்கள் மனைவிடுத்து 
உறைகிறார்கள் ஊர்தி பார்த்து 
உணவோ 
உந்துதலற்ற ரொட்டி துண்டில்,
அழுகையும் ஆர்பரிப்பும் 
அலாதி இங்கே,
அது கிடக்கட்டும் 
இந்த முதல்நிலை 
முனைவர்களுக்குதான் 
எத்துணை பெருமை?
ஆம், அவர்கள் 
முதல் நிலை 
முகர்வதாலேயே  
முனைவர்கள்தான்;
மனம் இனிக்கும் அகரம்முதல் 
தனம் சேர்க்கும் (a)எகரம்  வரை 
குலை தழைக்க 
விதையிடும் வீரியர்கள் -எனினும் 
விசித்திர வினையாற்றலில் 
விதிவிலக்கல்ல 
இவர்களும் இன்று; 
வான்பார்த்து மண் சுற்றிதிரியும்
பொழுதுகள் களவாடி 
வீட்டுபாடம்,
ஒட்டுதல்,
வெட்டுதல், 
கோலமிடுதல், 
குன்றமைத்தல் என 
சமனம் அமைத்து 
சமன் செய்கின்றனர்
சாதனை இல்லை இவை
சாமானியர்களுக்கும்;
சிறார்களுக்கு 
சித்திரம் பழக 
சுவரே சிறப்பு , மாறாய் 
வெள்ளை தாளும்
வண்ண சாயமும் இல்லை 
எண்திசை சுவற்றில் 
செதுக்கிய  கிறுக்கல்கள்
அஜந்தாவையும் ஆழம் பார்க்கும், 
எல்லோராவையும் என்னென்று கேட்கும்; 
விட்டு கொடுங்கள் 
விட்டு விடுங்கள் 
தளர்வாய் 
விண்ணை தொடுவார்கள் நம்
வீர தமிழ்போலே 
வைய தலைமை கொண்டு ........

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்