மழவர் நாடு
மகவென வந்த
மழவர் நாட்டின்
மாண்புனரும் நேரமிது
முக்கனி முதலாம்
மாங்கனி அமைத்தே
மழவளம் உரைக்கும்
மழவர் நாடு
எஃகும் , அனல்
கக்கும், பணிமலை
ஒக்கும்
தமிழ் பணியே
தலையென கொண்ட
ஒளவை தனை
தந்தமையே
தகைமை இங்கே
வீர ஊற்றாய்
தீரன் தீட்டிய
திட பூமி
ஒளி பேழை கூடாரத்தின்
ஒய்யார சிங்காரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
கண் குளிரும் பூந்தோட்டம்
மெய்சிலிர்க்கும் காற்றோட்டம்
எற்காட்டின் ஏரோட்டம்
நாடெல்லாம் தேடி வரும்
மேடெல்லாம் ஓடி வரும்
மேட்டூர் அணை பாய்ச்சல்
மெருகேற்றம்
ஊற்று மலை நீரோட்டம்
கஞ்சமலை காற்றோட்டம்
மக்கள் மலை தேரோட்டம்
பாரெல்லாம்
பளபளக்கும் - லீ
பஜாரில்
பவனி வரும்
அணிகலனின்
அணிவகுப்பாய்
வெள்ளி தொழில்
வெளுவெளுக்கும்
உயிரியலும் ஊற்றெடுக்கும்
குருவம் பட்டி கூத்தாடும்
மழவர் நாடு மணமணக்கும்
மக்கள் மனம் மெய்சிலிர்கும்
வாழ்க எம்
மழவர் நாடு
Happy Salem day
கருத்துகள்
கருத்துரையிடுக