ஆண் பெண் நட்பு
பதின் தாண்டி
முதிர் கொண்ட காலத்தில்
முந்துதல் இன்றி
நட்பே மூட்பென
அன்பே அகமென
கருத்தியல் கொண்டே
கருத்தரிகின்றன-இக்
கை கோர்ப்புகள்;
மாண்பு மொழியே
மாலை வரை
மனம் கொண்டபோதிலும்
சினேக மொழியே
சிரிப்பில் சேர்த்து
சித்திரம் எடுக்கிறது;
கோதிடும் தலையும்
இணைந்திடும் விரலும் – மன
இன்னல்கள் தீர்த்தே
இனிமை சேர்க்கும்
அவ்வளவே ;
பாலினம் மறந்து
பல கதைகள் பேசி
பண்டங்கள் பகிர்ந்தே
பகல் தேய்கிறது ;
எதிர் பாலின நட்பை
எதிர் கொண்டோர்க்கெல்லாம்
புதிர் தந்தே போகிறது
சில கள்ளசிரிப்புகள்;
புதிர் கண்ட நட்புகள்
புறத்தே பல புரிதலும் கண்டு
புன்முறுவல் பூத்தே
புனர் ஜென்மம் காண
மனம் கொள்கிறது;
பெண்ணின் ஆண்மையும்
ஆணின் பெண்மையும்
அன்பில் அறிந்திட
நட்பே வித்து ;
காலங்கள் கடந்தாலும்
கல்யாணம் முடிந்தாலும் – தம்
மழலை விளித்தலில்
விண்ணேற்றம்
காண்கிறது சில
வியத்தகு நட்புகள்.......
கருத்துகள்
கருத்துரையிடுக