இடுகைகள்

girls லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .   

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து  மொழி பகிர்ந்தாலும்  மனம் கோனாது-நீன்  மைய்யலில் மைய்யம் கொண்டிருப்பாய். பூவே இன்னுமும்  சொல்வேன் கேளாய் , இந்த பூ புவியில் பூத்தது புலம் பெயரவும்  மனம் பகிரவும்