இடுகைகள்

மருமகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து...