சுதந்திரம் ஒரு பார்வை





சுதந்திர காற்றில்
சுவாசமாய் ஒரு கீதம்

ஆண்டு பல
அலைகழிந்து கொண்டிருக்கிறன;
ஆயினும் அகப்படாது போனவை
ஆயிரம் -அவற்றின்
பாயிரத்தை பகுத்தாய்ந்து 
பண்படுத்த சில இங்கே

மண் சொறியும்
மழலை
மழை நினைக்கும்
பேதை கோதை
கேணி கேட்ட
கேரளத்து ஸ்வரங்கள்
மனம் கொள்ளும்
மண் புழுதி
மகுடம் தரித்த
மாமொழி இலக்கணம்
சாதியரும் ஞானியராய்
சமைதிட்ட சமத்துவம்
கதிரவன்  காணாது 
போனபின்னும் எம்
வீர மங்கையரின்
வீதி உலாக்கள்
தம்மவரை 
தாமே
தமதாக்கும்
தளர்வு
மறுவீடு கண்டபோதும்
சப்த மணிவரை ஒரு
நிசப்தம்
அறுவடைத்த அறிஞர்களே
வணிக விலை வகுக்கும்
களிப்பு
குடியரசின்
குண பிறழ்வில்
கனம் கொள்ளா அறிவின் 
சினம்

காலகூத்தால் இவை
கை சேராது போயினும் -என்
கவிதையிலேனும் நான்
காட்டு தீ வளர்ப்பேன்
கடமை கொண்டே

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்