பறை
இனிமையும் அமைதியும் என
இதம் சேர்த்த கணத்தில்
கதையாய்
களங்களின் ஓர்
கலங்கரையாய்
கணிந்தது நம் பறை ;
கலிங்கத்து பரணியில்
பரணிக்கு நிகராய்
பிளிரும் இசை
பறை ;
போரடித்து, கதிர் அறுத்து,
கருத்தளங்கள் சேர்த்திடும்
கரங்களின் கைவினைகள் -இப்
பறையிசையின் பரிணாமங்கள்;
நாவிரல் நாட்டியத்தின்
நவரச பாவங்கள் நம்
நாளத்தின் தாளங்கள் ;
களை திருத்தி களைத்த
தின்தோல்களுக்கு
தோல்கொடுத்து நிற்பவை இத்
தோல் பாவை ஆட்டங்கள்
அந்திமாலை மயக்கத்திலும்
ஆர்பரிப்பின் அடித்தளங்கள்
பறை தாங்கும் அடி தாளங்கள் ;
தமிழ் கருவுலத்தின்
கருத்தளங்களை
களம் சேர்த்த
கலைஞர்களின்
கைவண்ணம் – நம்
பறை ;
குலம் சேர்க்கும் குழவி முதல்
நிலம் கோர்க்கும் கிழார் வரை
கிளிந்தோடும் கீர்த்தனைகள் இக்
காவிய காந்தங்கள் ;
சீறி வரும் சிப்புகுச்சும்,
ஆடி வரும் அடிகுச்சும்,
பறைகளை பதம் பார்க்கும் ,
ஆடா அண்டத்தாரையும்
ஆடவைத்து
ஆழியையும் அதிர வைத்து
ஆர்பரிக்கும் இசை,
ஆதி கண்ட பறை...,
கருத்துகள்
கருத்துரையிடுக