சந்தை


தொழிற்சாலையில் தொடுக்கப்பட்ட
தோரணத்தின்  தொடுபொருள் காட்சிதான்
சந்தை வணிகம்
முகநாசி நுகர்தலையும்
ஒலி ஒளி பகிர்தலையும்
பண்படுத்தும் பேரமைப்பு-இப்
பண்டைமாற்று வணிக சந்தை
விளித்தலையும் ஒளித்தலையும்
கழித்தலையும் காத்தலையும்
ஒருங்கிணைக்கும்
ஒய்யாரம் இவ் ஓர் கூட்டு வியாபாரம்
சுண்ணாம்பு சுவர்களிலும்
பளிச்சிட்ட பாதுகைகளிலும்
பளபளக்கும் ஒளிசித்திரம்
நுகர் சேர்க்கும் நுண்ணறிவு
தொலைதூர தொடர்பினிலும்
தொலைகாட்சி தோன்றலிலும்
மனம் கவரும்
மாயாஜாலம் -இம்
மாசந்தை மைதானம்
வசன வடிவமைப்பில்
சனம் சேர்க்கும்
சரணாலயம் சந்தை படுத்தும்
சாதுர்யம்
மாற்று வழி மாந்திரிகம்
சந்தை மாற்றும் மந்திர மார்கம்
சரித்திரம் படைக்கும் சந்தைப்படுத்தல்
சாமானிய சேவைக்கு
செய்தி தொடர்பே

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்