பணி



மாநகரை மணமணக்க
மாபணிகள் செய்போரை
கண நேரத்திலும்
கண்டுகொண்டதுண்டோ?
அகத்தே அழகுற
அழுகு பொருள்
அண்டாது, அவை
அகற்றும் நேரத்தில்
அவற்றை ஆதாரமாய்
அமைந்திங்கு வாழ்ந்து வரும் 
அவலங்கள் களைத்திட 
தலைத்திடுத்தல் உண்டோ?
சாக்கடைகள் கடக்கையிலே
சனம் சலிக்கும் முகமெல்லாம் -அதை
சார்ந்தே சாவோனின்
நிலை கலைத்தல் உண்டோ?
குடல் இறக்கும் குப்பைகளை கை
கூட்டி வாரி அள்ளும் அவலத்தை
சாந்திராயன் காலத்திலும்
சனம் செய்தே செத்து மடிகின்றன
என் சிந்தையில் உதித்தமட்டில்
ஏனையோர் தொழில்களிலே தினம்
ஏளனமாக்கும் துப்புரவே
ஏவுகணை செய்வதிலும்
ஏற்றம் கொண்டு நிற்கிறது
மறுதலிக்கும் நீதிகள்
மனித இனத்தின் சபாக்கெடுகள்
துப்புரவுடனும்
நல்லுறவு கொண்டிங்கு-அவர் பால்
நலம் செய்தல் வேண்டும்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்