பாரதி செய்வோம்



எட்டயபுரத்துகாரன் ஆனால் இவன்
எண்திசைக்கும் சொந்தக்காரன்;
கதைகளிலும்
க விதைகளிலும் தமிழர் நெஞ்சில் தமிழ்
விதை விதைத்தான்;
தையலை தனக்கென்றே கொள்ளும் நிலை மாற்றி
தையலின் தரம் போற்றி
தரணி ஏற்றி ஓர்
தவ புரட்சி செய்தான்;
அன்னியமாய் தனித்து நின்ற ஆண்டிகளையும்
ஒன்றிணைத்து ஒன்றியமாய் ஓங்கி நின்றான்;
வெள்ளைத்தாளில்
வேல் பாய்ச்சி
வெள்ளயனை களம் கண்டான்;
களம் கண்ட கலியுகத்துக்காரன்
காளியையும் விட்டு வைத்ததில்லை,
உன்னை நினைக்கும் 
நிலை துறந்து
என்னை நினைக்கும்
நாத்திகம் ஏற்பேன் என
எச்சரித்தான்;
களம் கண்ட கலியுகத்துக்காரன்
களிறேற காலம் கடந்தான்
காட்டுத் தீ வளர்த்தே;
அத்தீயினுடே தீந்தமிழ் வளர்ப்போம்
தீராவிடம் காப்போம்
வீட்டுக்கொரு பாரதி செய்வோம்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்