மௌனம்



சோனாவின்
கலை வார
கொண்டாட்டத்தில்
கொணர்ந்த
மெளன ராகமிது 

மௌனம்
மோதிக் கொள்ளும் மனதின்
மோட்ச நிலை
இரு விழி
இருண்டு
காதுகள்
கரைந் தோய்ந்து
வாய் மொழி
வழக்கொழிந்து
உள்ளொளி நோக்கும்
உன்னத நிலையே மெளனம் ஆகும்
கோடிக்கணக்கான நினைவுகள்
கொட்டி கிடக்கும்
குப்பை கலவை இந்த மௌனம்
ஆம் குப்பை கலவை தான்
இதில் தீதும் உண்டு
தீந்தமிழும் உண்டு
தீந்தமிழைத்
தேன் என்றும்
தீச்சுடரென்றும்
நன்றென்றும் கொள்பவன்
நான்
ஆதலால்
இதில் தீதும் உண்டு
தீந்தமிழும் உண்டு
முட்டி மோதி
திட்டி தீர்த்துக்
கொட்டி கலக்கும்
சமுத்திரம் இந்த
மெளனம்
மௌனத்தின் முற்றம்
சொல்லும் செயலும்
அச் சொல்லும் செயலும்
நம் தீந்தமிழ்போலே
இனித் திடல்  வேண்டும்
தேசியம் காத்து
தழைத்திடல் வேண்டும்
மெளனம் கொள்வோம்
தீவினை கலைத்து
தீந்தமிழ் பொருத்தி
தீச்சுடராய் தேசியம் காப்போம்
வாழ்க பாரதம்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்