ஆண்


அன்னையின்  வயிறு கிழித்து
 அவள் வழி உதிரம் குடித்து 
அம்மணமாய் தரணி பதித்து
வானவில்  வாழ்க்கையில் 
வளம் பெற்று
பனவோலையிலே  பானம் அருந்தும்
பாதை மறந்து 
காசோலையினை கிருக்கி கிழிக்கும் கீர்த்தி பெற
வீடு துறந்து காடு மறந்து 
பரதேசம் போயும்
பாடாய் பட்டு
பாடம் கற்று
பணமும்  பெற்று 
தாய்,சேயின்  நலம் காத்து
தன்னவள் மனம் மகிழ 
தவபுதல்வர்கள் பெற்றெடுத்து 
தாலாட்டு பாட்டு முதல் 
தரணி பாடும் கூத்து வரை
கூட்டி சென்று
கூடி குலவி கூற்றுரைத்து 
கூட்டு சேர்த்து
தலை கிளைகள் பெற்று
தள்ளாது வயதிலும்
தழைத்தோங்கும் 
தல விருட்சம் கண்டு களிம்புற்று 
தளர்ந்து உறங்கும் 
மன்னா | 
வாழ்க |
                          

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்