மாலை மங்கும் நேரம்
வானம் வழி கொடுக்க
வளைந்து விட்டது
கானல் காக்க
கொள்ளாமல்
வெப்பம்
கக்கும்
கதிரவன்
கரைகிறது
மகிழ்ந்து
மலைக்கும்
மலை பின்
மறைகிறது;
வானச்சட்டியில்
மேக அப்பளம்
பொரித்தது யாரோ ?
அதோ
அந்த
கரையும் கதிரவன்தான்
பொரித்து சிவந்த
அப்பளங்களை
வானம் எல்லாம்
அப்பிவிட்டு அணைகிறான்
ஆதவன் மறைகிறான்
மாதவன் மறைந்ததால்
மங்கியோன் மிளிர்கிறான்
லேசாய்;
லேசாய் தான்;
மாதத்தில்
எல்லா நாளும்
பௌர்ணமிதான்
அச்சிறு வேளையில்,
மறைத்த
மாதவன்
விலகி செல்கையில்;
மறைந்த
பிறையோன்
பிளந்து வருகையில்
சிறு மணித்துளிகள்
மாதமெல்லாம்
பௌர்ணமிதான்
கதிரவன் கரையும்
காலங்கள் எல்லாம்
கடற்கரை சாலையில்
காதலர் கவிபாடும்
காலங்கள் ஆகும் ;
கவிபாடும் காதலுக்கு
கருமையின் இருள்போக்க
உவமைக்கு உயிர் தர
உலகில் உதிக்கிறான்
மாதவன்
மதியாய் – மேகம்
மாக்கோலமிட்ட
வானத்தின்
வெண்ணிற
வண்ணமாய்;
வெள்ளி கிண்ணத்தில்
வெண்சோற்றில் நெய்யூற்றி
வேந்தனை மடியேந்தி
மதி பார்த்து
மகிழ்வூட்ட-பல
குணவதிகள்
வான் கொட்ட
விளிக்கிறார்கள்
அவர்தம் மழலையுடன்;
ரகசியமாய்
ரசித்து விட்டு -இப்
பொழுதை
போக்கிவைப்போம்
மாதவன் மதிகாட்ட
கோபியர்
குவளை கண்ணனுக்கு ஓர்
கவளம் கனி தர..
கருத்துகள்
கருத்துரையிடுக