இடுகைகள்

தமிழ் கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவரஸா

படம்
  கருவில் உதித்து உரு கண்ட என் சிசுவின் பொக்கை வாய் நகையும் அசௌகரிய அழைப்பின் அழுகையும் உதிரம் மிகுந்த இளிவரலும் அது கொணர்ந்த உவகையும் மாந்தர் மகிழ்வின் மனம் புரியா மருட்கையும் அள்ளி அணைக்கும் அன்புகள் உணரா அச்சமும் -பின் அன்பின் இனம் கண்ட பெருமிதமும் அண்டத்தில் அணைத்தோர் வசம் செல்லும் வெகுளியும் பின் சோர்ந்து துயிலும் அமைதியும் அகிலம் ஆளவிருக்கும் என் ஈஸ்வரியின் நவரசங்கள்            

வாசிப்பின் வாசல்கள்

படம்
அண்டத்தில் உள்ள  அனைத்து ஜீவராசிகளுக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத அன்னையின் பாசத்தை  ஆணை சாவாரியை  இனிப்பின் சுவையை  ஈக்களின் ஒலியை உள்ளத்தின் உணர்வை ஊடலின் இன்பத்தை எச்சில் சுவையை ஏறு தழுவுதலை  ஐந்துக்கள் கொஞ்சலை ஒப்பாரி ஓலத்தை ஓலைபாயின் ஒண்டு குடித்தனத்தை ஔபாசனப் புகையை ஃகின் மொழி வளத்தை சில  வாசிப்பின்  வாசல்கள் அனைத்தையும்  அகம் சேர்த்து  அழகு பார்க்கின்றன

அகரமும் ககரமும்

படம்
  அன்பும் கருணையுமாய்  அறிவும் காதலுமாய்  அழகும் காந்தமுமாய் ஆகாசமும் காற்றுமாய்  அலகும் கனவுமாய்  அறமும் கடமையுமாய்  அகரமும் காகிதமுமாய்  அணிகலனும் கழுத்துமாய்  ஆடவனும் கன்னியுமாய்  அவனும் காதலியும்   காலத்தில்.

மிதிப்போம் மிதிவண்டி

படம்
  காலச்சக்கரம் சுழல்கிறது புதியதொரு விடியலை காண பழையனவென கழித்ததெல்லாம் பகட்டாய் நம் வாழ்வியலில் படர்ந்தோடுகிறது மீண்டும், மீண்டும் மீண்டும்.   அதில் இன்று மின்சார பொறிபோல் அகம் கொண்டது இந்த மிதிவண்டி.   காலச்சக்கரம் தம் பாதையை பின்னோக்கி   மிதிக்கிறது சற்றே மதிக்கிறது   கண நேரத்தில் கடந்து சென்ற சொகுசு வாகன சுகவாசிகளையும் சற்று வியர்வை குளியலில் நனைத்திருக்கிறது மிதிவண்டி   புல்லட்டு ஏறி பூவனம் சுற்றிய புன்னகை அரசர்களையும் பொற்பாதம் கொண்டு மிதிவாங்கி கொண்டது மிதிவண்டி   எரிபொருள் ஏற்றதில் சிற்றம் கொண்ட சிறார் சிலரை   சிந்திக்க செய்து     சிந்தை சக்கரத்தின் பாதையை சற்று தன் வசம் திருப்பி உள்ளது மிதிவண்டி   இனி சாலைகளில் சில சுழற்சிகள் புதுமையில் சுழலவிருக்கின்றன   ஒய்யாரமாய் ஓய்வெடுத்த ஓவிய பாதங்களும் ஒழுகவிருக்கின்றன வேர்வை கசிவில், கசியட்டும் சில காலம்     கருத்துடனே   காலங்கள் எம் கண்மணிகளுக்கும்...

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

பெண் மயிலின் தோகைகள்

படம்
அன்றொருநாளில் அழகிய வானில் அலைந்த மயில்கள் அண்டதில் இடம் தேடி என் அருகில் அமர்ந்தன பிடாரி மையிரை பிடித்தது போலே பின்னங் கழுத்தை பிசைந்து கொண்டு பின் அடி கண்டது வீசிய காற்றின் விகாரம் கொண்டு விண்ணோக்கி ஓர் வினை செய்தது தோரணம் தொடுத்த தோரணை கொண்டு இறக்கை விரிக்க ஓர் இடம் கண்டு கொண்டது அருகில் இருந்த அழகின் ஆணையில் உடலை உலுக்கி ஓர் உவகை தந்தது தொண்டையின் ஓசையில்   தொடங்கி கொண்டையில் சிலிர்ப்பில் பல தோகைகள் தோரணம் கொண்டது அச்சிறு பொழுதில் என் மனம் மையம் கொண்டதெல்லாம்   பெண் மயிலின்   பேராண்மையில் தான் இயற்கையின் இசைவில் தோகைகள் துறத்து தோரணம் மறந்தாலும் சோர்வுறாது சினை கொண்டு சிறகடிக்கும் ஆண்மயில் ஈன்று இறுமாப்புடன்   திரியும் பெண்மையிலே ! நின் வினை நிலத்தினில் பெரிது வாழ்க நீ மன மகிழ்வோடும்- ஆண் மயிலோடும்.

நட்பதிகாரம்

படம்
இயந்திரவியல் துறையில் இணைந்த காலத்தில் இன்னது செய்வதெனத்   தெரியாமல் கழிந்தன நாட்கள். கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும் காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது. இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில் இணைக்கப்பட்ட இருபத்தெட்டின் இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது. நட்பென நால்வருடன் நல்கிய போதிலும் நான் தேடிக் கண்டது என்னை , என்னைப் போல் நின்னை. அங்கொரு மூலையில் கதவுகள் திறக்கும் காற்றோசையின் பின்னால் கருநிற கண்ணன் ஒருவன் காத்திருந்தான் – என்னுள் கலக்கக் கதைத்திருந்தான். எனக்குப் பின்னால் அமர்ந்து எர்ணாகுலம்   வந்தாய் என எந்நாளும் சொல்லி வியக்கும் எம் எண்ண மொழிகள் அங்கொரு மூளையில் சாரை எறும்புகள் சீனி தேடி ஒரு யாத்திரை சென்றன யாத்திரை யாமத்தில் யானும் சேர்ந்தேன் யாத்திரை கொண்டேன் நின்னை அடைந்தேன் பின் கண்ட காட்சி எல்லாம் கவிக்கத்   தான் வேண்டுமோ? சாகா வரம் தந்து சகாப்த நட்பிற்கு வித்திட்டாய் இது போல் சாட இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன் யானும் அஃதே     நாம் கொண்...