காவிரி


விரிந்து செல்லும்
காவிரி
காவென செய்ய
ஆவண செய்தல் வேண்டும்
அனைத்துலகியர் பால்
அன்பு கொண்டு
அமுது சமைக்க
நீர் பார்முழுதும்
பரந்தோட வேண்டும்
நிலப்பரப்பை
வளப்படுத்த கொண்ட
கோடெனவே
கொள்கை கொண்டு
அன்பிற்கில்லை
அடைகுந்தாழ் கோடுகள் என
அமுது சமைக்க- ஓர்
பட்சணம் பகிர்தல் வேணும்-அது
பாரபட்சம் பாராத்திருத்தல் வேணும்
பால்வெளியில் பறந்தோட
பல உலகு நமகில்லை- நம்
பார் சிறக்க காதல் செய்ய -ஓர்
கவளம் நீர் வேண்டும் - இல்லையேல்
குவளை கண்ணீரே மிஞ்சும்
நீருக்கு சொரிந்த கண்ணீர் என்பது
திராவிட இழுக்கு
நீருக்கு இல்லை எல்லையென
 நிலை கொண்டிருப்போம் 
திராவிடம் வழி தேசியம் காப்போம்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்