சமத்துவம்


விலங்குகளின்
விந்தை வினையில்
சந்ததி சேர்த்தது இச்
சாமானிய கூட்டம்;
சோறும் நீரும்
சார்பற்றே
சமனம் கண்டது
செம்மொழி மண்ணில்
அகிலம் போற்றும்
அழகன்றோ தமிழ்? - ஆதலால்
அறியா காதலாய்
கலந்தது ஆரியம் 
குமரி மண்ணில் -சாதி
கலந்தது- நம்முள்
குலைந்தது - நம்மை
பிளந்தது;
குடியாதவனை 
குலம் சேர்க்காமல்
குலை சாய்தால்
கூடுதல் உண்டோ
இம்மானிடத்தே
இல்லை-நம்
ஆதி தமிழன்
சாதி கண்டதில்லை;
மதி கொண்ட மைய்யலும்
மகவும் கொண்ட வீரமும் -எம்
மாமொழியின் மாண்புகள்
அன்றி வேறில்லை
ஆக,ஆரியர் காலத்து
சாதிக்கும் சற்று
காலங்கள் கண்டதென
காடு கடத்துவோம் ஓர் வையக காதலுடன்;
ஜென்மங்கள் பல கண்ட
ஜாதிக்கு
ஜனம் சேர்ந்து இனியேனும்
முக்தி தரல் நம்
வரவிற்கு தளர்வு;
குமரி கண்டத்து
குலைகள் தழைக்க
ஆவண கொலைகள்
அண்டாது அரண்
அமைப்போம்;
சாதி மரங்கள்
சரித்து   ஓர்
சமத்துவத்தில் தழைப்போம்
அங்கே இச் சுவடுகள்
காணாது காதலுடன்....

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்