விவசாயம்




பசிக்கு
புசித்திட
பண்டங்கள் பண்ணணும்
குடியவனும்
குலம் பெயர்ந்திட
குடியாதவன்
கூடி தொழில் செய்யணும்
குளங்களும்
ஏரிகளும்
மாரிகளால்
மகிழ்ந்திடணும்
அதற்கெனவே நாம்
மாதவங்கள்
செய்திடணும்
புடலையிலும்
பூசணியிலும்
பூச்சு கொல்லி
புறந்தல்லி
இயற்கையுடன்
இணைந்திங்கே
இருள் போக்கி
போற்றிடணும்
தானியமும் திராவியமும்
அறுவடைத்த அறிஞர்களே
வணிக விலை
வகுத்திடணும் 
மாசற்ற பூவியமைத்து
மாரிக்கு வழிவகுத்து
நெற்களஞ்சிய
கதிர் அறுத்து
கருத்தளங்கள்
சேர்த்திடுவோம்
விண்ணுயர
வித்தை பல
வியத்தக
வித்திட்டாலும்
மண்ணுயர்த்தி
மாரி காத்து
மாசற்று
மண்புழுவின்
மகுடேற்றி
மதிப்பளிப்போம்
விளைச்சளின்
வீரியத்தை
விண்னேற்றி
வான் சிறப்போம்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்