இடுகைகள்

உன் மனைவி என்ன செய்கிறாள்?

படம்
உன் மனைவி என்ன செய்கிறாள்? அவள் சோம்பல் முறிக்கிறாள், சாணம் தெளிக்கிறாள்,  கோலம் போடுகிறாள், பிள்ளையார் வைக்கிறாள், கர்பகிரகம் சுற்றுகிறாள்,  குளம்பி குடிக்கிறாள்,  பாடல் வரி ருசிக்கிறாள்,  இன்னமுது சமைக்கிறாள், பாத்திரம் துலக்குகிறாள்,  வீட்டில் இருந்தே பணி செய்து பெரும் பாத்திரம் வகிக்கிறாள், குழந்தை பராமரிக்கிறாள்,  அமுதூட்டுகிறாள்,  அதில் பெரும் அலப்பறையும் செய்கிறாள், அலமாரி அடுக்குகிறாள், கழிவறை சுத்தம் செய்கிறாள், நாளுக்கு ஒருமுறை ஏனும் கயல்விழி உருட்டி மிரட்டுகிறாள்,சிரிக்கிறாள், சிணுங்குகிறாள், துணிகள் உலர்த்துகிறாள், கைசெலவிற்கு பணம் தருகிறாள், காதல் செய்கிறாள், அம்மா இல்லாத நேரத்தில் கன்னத்தில் கண்றாவி செய்கிறாள், சில நாட்களில் என்னை விட்டு நித்திரையில் மூழ்குகிறாள், இது போதா குறைக்கு மூக்குக்கு முக்கால் இன்ச் கீழே மதுபான கடைவேறு நடத்தி வருகிறாள் தோழி.

கிறிஸ்துமஸ் தாத்தா

படம்
மகள் கேட்டு வாங்க முடியாத மரப்பாச்சி பொம்மைகளை முந்தி கொண்டு பேரனிடம் சேர்ப்பதில் தோன்றி மறைகின்றனர் சில கிருஸ்துமஸ் தாத்தாக்கள்

தேடல்

படம்
  அதிகாலை அவசரமாய்  அயலூர் செல்ல  ஆயத்தமாக  அலுவல் கோப்புகள் தேடி எடுக்க  அலமாரி  அடுப்பங்கரை  மேசை  கட்டில்  தொட்டில்  இண்டு  இடுக்கு  என  தேடி  ஓயும் வேலையில் , நீண்ட  நாள் தேடுதலாய்  இருந்த  இளையராஜா  மெல்லிசை  குறுந்தகடு, குக்கர் வெய்ட்  , செவி பேசி , காஜல் கண்மை , உதட்டு சாயம் , பச்சை துண்டு , பத்து ரூபாய்  பவளமணி , நட்சத்திர பொட்டு, நோக்கியா பேட்டரி  என  வரிசைகட்டி  கண் முன்  காண  பெறுவதெல்லாம் தேடலின் வரங்கள்  

கடவுள் காட்சி

படம்
கடவுள் எனக்கு  காட்சி கொடுத்தார் அநீதி என்னை  அச்சுறுத்தும் போதும் மடமைகள் என்னை  சுட்டு எரிக்கும் போதும் சினம் என்னை  சீரழிக்கும் போதும் கவலை என்னை கதிகலங்க செய்யும் போதும் சன்னல் வழியே வேடிக்கை  பார்த்தே  கடவுள் எனக்கு காட்சி கொடுத்தார்

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

சொக்காய் சௌகரியங்கள்

படம்
பொக்கை வாய் கிழிசல்கள் பொத்தானை துருத்தி கொண்டு மெய் பொருந்தி நிற்பதால்  சொக்காயில் சில சௌகரியங்கள்

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .