அது ஒரு மழைக்காலம்
குறுக்கிட்ட
குறுகிய வான் பயணங்கள்
இப்படியும் இருந்தன
வான் சுரந்த மண்
நாசி வழியே ஞானம் கண்டன
குட்டையின் தேக்கத்தில் சற்று
சேட்டைகள் மிகுந்தே இருந்தன
ஒட்டு குடிசை ஓரம்
சொட்டும் ஓசை ஓர்
சொப்பன ஸ்வரத்தை
சொல்லிச் சென்றன
தட நடையும்
தட தட ஓட்டமும் காணும்
தார் சாலைகள் இன்று -குப்பை
வேர் அகற்றி
வெறி சோடியிருந்தன
காலம் கடந்தாலும் சில
காகித கப்பல்கள் குட்டையில்
முந்திக் கொண்டு
நீந்தி இருந்தன- நீர்
சொட்டிய சொக்காய்கள்
சோலை அடியில்
சோம்பல் முறித்தன.
ஈரம் சொட்டிய
மயிர்கள்
மங்கையின் கன்னங்களை
கவ்விப் பிடித்திருந்தன
மழை குடையான
நிழற்குடையிலிருந்து
நீட்டிய கைகள் சற்று
மழையைக் கட்டி பிடித்திருந்தன
கவிஞன் கண்ட
கத்தும் குயிலின்
குத்தும் இறக்கைகள்
குத்தாட்டம் போட்டே
கொஞ்சி இருந்தன
கார் மேக
கருத்தரிப்பில் சில
கவிதைகள் இப்படியும்
உயிர் கொண்டிருந்தன
கருத்துகள்
கருத்துரையிடுக