பெண்
பேதையாய் பிறப்பெடுத்து
உரம் பெற்று
உதிரம் போக்கி
உரு மாறி
பெதும்பையாய் போற்றுவித்து
மலர்சூடும்
மங்கையாய் மனமுவந்து
மணமுடித்து மழலைபெற்று
மாண்புயர்த்தி மகுடம் தறிக்க
மடந்தையாய் மனமேற்றி
மாநெறி காத்து
ஆழி சூழ் அண்டத்தின்
அறிவை அரிவையாய்
தெரிவையாய் உணர்ந்தமையால்
பேரிளம் பெண்மையை அடைந்தே
பெருங்களிப்படைபவள் நீ.....
கருத்துகள்
கருத்துரையிடுக