இடுகைகள்

உழவர் திருநாள்

படம்
பழையன கழிதலும் புதியன புகுதலுமே புரட்சியன கொள்வதுண்டு  அப்புரட்சிதனை போரடித்து நெற்காத்து நேர்நிமிர்த்தி ஊண் சமைத்து உண்டு களிப்பதே உழவர் வினையாம்; கண்ட விளைச்சலிலே களை திருத்தி கதிர் அறுத்து களம் சேர்த்து இனம் காப்பான் காவலாளி-ஆம் ,அவன் மானிட இனத்தின் காவலாளிதான் பசிப்பிணி போக்கி பார் காக்கும்  பண்டத்தின் படைப்பாளியை பறையடித்துக் பொங்கலிட்டு பொற்றிடுவோம் தமிழினத்தை காத்திடுவோம்

மண் வாசனை

படம்
கருத்த வானத்தால் இடிந்த மேகங்கள் மழைதுளிகள் துள்ளி  திரிந்த துளியின் துளையிட்டு நிலைதான் மண்வாசனை மாரியின் மண் தழுவல் மனமெல்லாம் மகிழ்வுட்டும் மனக்கோலத்தின் ஆதியெல்லாம் மண்வாசனையே  உரித்து ஊரி செரிந்து சேரியாய் செழிக்கும் திடத்தின்  வாயுவாய் அமந்தமையே மழை கொள்ள துளிகள்,உலர் துணிகள் சாரல்-மூக்காடும் சாக்கடைகள் என பலவான போதிலும் மழை  மனம் கொள்வது மண்வாசனையில்தான் ஒலி கெட்டு போனலும்  ஒளி கெட்டு போனலும் ஓங்கி நிற்பது முகர் தரும் வசனைதான் ஆழி சூழ் உலகின் அடிநாதமாய் விலங்கும் மூச்சிலே முடிந்திருக்கும் மண்வாசனை ஆழிக்கும் அறிவூட்டும் அழகு பார்

காதல்

படம்
தமிழனும் தமிழச்சியும் தழைத்தோங்க குலம்காத்து தவபுதல்வர்கள் தமையீன்று தரணி எல்லாம் தனம் சேர்க்க தெள்ளியதோர் சிந்தை பொருத்தி தமிழர் பால் காதல் கொள்வோம்; காதல் காலம் கழியா  காலபெட்டகம் என கூடி முழங்கிடுவோம், காதல் கருத்தியல் கொணரும்  கட்டட்ற மேதா விலாச மூலை மடிப்பில் மையம் கொள்ளும் மயக்கம்தான் என இறுமாப்புரைப்போம், மங்கா ஒளியுடன் மகிழ்ந்திருப்போம்.

பெண்

படம்
பேரிருளின் பிளப்பாய்  பேதையாய் பிறப்பெடுத்து உரம் பெற்று உதிரம் போக்கி உரு மாறி பெதும்பையாய்  போற்றுவித்து மலர்சூடும் மங்கையாய் மனமுவந்து மணமுடித்து மழலைபெற்று மாண்புயர்த்தி மகுடம் தறிக்க மடந்தையாய் மனமேற்றி மாநெறி காத்து ஆழி சூழ் அண்டத்தின் அறிவை அரிவையாய் தெரிவையாய் உணர்ந்தமையால் பேரிளம்  பெண்மையை அடைந்தே பெருங்களிப்படைபவள் நீ.....

மகள்

படம்
பாரதம் பேண ஒரு பாரதி வேணும் கலியுகத்தின் கவுச்சி நீங்க ஒரு கன்னியாய் வேணும் சொப்பில் சோம்பல் முறிக்கும் சுகம் துறந்து சூத்திரத்தின் சூழ்ச்சி அவிழ்க்கும் சுறுசுறுப்பு வேணும் அது சிறு பூவாய்யும் வேணும் அவள் கீர்த்தி பெற அவளின் கீழாய் கீழாய் நான் நானாய் கொஞ்சம் அவளாய் அவளின் மழலை கடலில் நீந்தி என் முத்தை நான் முந்தியெடுக்க வேணும் அன்னம் சிதறி உண்ண மறுக்கும் அவள் அன்ன நடைக்கு என் நடை இணை செய்யணும் அன்ன சாலைகளும் அண்ணா சாலைகளும் கடந்து அவள் அனைவர் பட்டம் பெற வேண்டும் அது முனைவரிலும் பண்பட்டது என் கைவிரிப்பில் அவள் உலகடைக்க வேணும் அவள் உலகடைப்பில்  நான் கைவிரிக்க இயலாது மகாகவி கடலில் மாண்புற நீந்தி கடந்தவள் கண்களில் கானல் அனல் கொப்பளிக்கும் தேடல்கள் வேண்டாம் - அவை தேவதையிலும் தென்படும் காலம் மிகுந்தால் கானல் காலனாய் மாறும் சுட்டெரிக்கும் தீ - என் சுட்டெரிக்கும்  தீ  என்றும் சுடர் தரும் தன் சுற்றத்திற்கும் சுகம் பெற நலம் வாழ

காவிரி

படம்
விரிந்து செல்லும் காவிரி காவென செய்ய ஆவண செய்தல் வேண்டும் அனைத்துலகியர் பால் அன்பு கொண்டு அமுது சமைக்க நீர் பார்முழுதும் பரந்தோட வேண்டும் நிலப்பரப்பை வளப்படுத்த கொண்ட கோடெனவே கொள்கை கொண்டு அன்பிற்கில்லை அடைகுந்தாழ் கோடுகள் என அமுது சமைக்க- ஓர் பட்சணம் பகிர்தல் வேணும்-அது பாரபட்சம் பாராத்திருத்தல் வேணும் பால்வெளியில் பறந்தோட பல உலகு நமகில்லை- நம் பார் சிறக்க காதல் செய்ய -ஓர் கவளம் நீர் வேண்டும் - இல்லையேல் குவளை கண்ணீரே மிஞ்சும் நீருக்கு சொரிந்த கண்ணீர் என்பது திராவிட இழுக்கு நீருக்கு இல்லை எல்லையென  நிலை கொண்டிருப்போம்  திராவிடம் வழி தேசியம் காப்போம்

மாலை மங்கும் நேரம்

படம்
வானம் வழி கொடுக்க வளைந்து விட்டது கானல் காக்க கொள்ளாமல் வெப்பம் கக்கும் கதிரவன் கரைகிறது மகிழ்ந்து மலைக்கும் மலை பின் மறைகிறது; வானச்சட்டியில் மேக அப்பளம் பொரித்தது யாரோ ? அதோ அந்த கரையும் கதிரவன்தான் பொரித்து சிவந்த அப்பளங்களை வானம் எல்லாம் அப்பிவிட்டு அணைகிறான் ஆதவன் மறைகிறான் மாதவன் மறைந்ததால் மங்கியோன் மிளிர்கிறான் லேசாய்; லேசாய் தான்; மாதத்தில் எல்லா நாளும் பௌர்ணமிதான்   அச்சிறு வேளையில், மறைத்த மாதவன் விலகி செல்கையில்; மறைந்த பிறையோன் பிளந்து வருகையில் சிறு மணித்துளிகள் மாதமெல்லாம் பௌர்ணமிதான் கதிரவன் கரையும் காலங்கள் எல்லாம் கடற்கரை சாலையில் காதலர் கவிபாடும் காலங்கள் ஆகும் ; கவிபாடும் காதலுக்கு கருமையின் இருள்போக்க உவமைக்கு உயிர் தர உலகில் உதிக்கிறான் மாதவன் மதியாய் – மேகம் மாக்கோலமிட்ட வானத்தின் வெண்ணிற வண்ணமாய்; வெள்ளி கிண்ணத்தில் வெண்சோற்றில் நெய்யூற்றி வேந்தனை மடியேந்தி மதி பார்த்து மகிழ்வூட்ட-பல குணவதிகள் வான் கொட்ட விளிக்கிறார்கள் அவர்தம் மழலையுடன