இடுகைகள்

கடவுள் குட்டு

படம்
பெண்னே மாநிலத்தில் மகிழ்ச்சியாய்  சுற்றி திரியும் உன்னை  அழைத்து அன்பு செய்து ஆரத் தழுவி ஆர்ப்பரித்து கபால கருத்தளம் வழி கலக்க செய்து காதல் செய்து மாநிலத்தில் மீண்டும் மய்யல் கொள்ள மகவு தந்து போவென பிறப்பின் நோக்கதை நின் சிரசில் கொட்டி சொன்ன  கடவுள் செயலோ உதிரப்போக்கு

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

கிழவனுக்கு வேற வேல இல்ல

படம்
படம் பார்த்து பட்டாடை உடுத்தி  பன்மாலை மாற்றி  திருக்கல்யாணம் செய்து  முகம் பார்த்து  முத்தமிட்டு  முனங்கள் செய்து முன்னோர் வழி  முத்துகள் பெற்று, முனைப்பாய் வளர்த்து  குலம் காக்க  கூடு சேர்த்து, கூரை பாயின்  குறுக்கே அமர்ந்து  குலப்பெருமை பேசும்  என்னவளின்  கன்னத்தில் விழும் எச்சில் துளி  ஒரு மொழி பேசி செல்லும்   “கிழவனுக்கு வேற வேல இல்ல” என்ற  அந்த  வாஞ்சை வார்த்தையில்  வளரும் அந்த காதல்

கருப்பியின் சிரிப்பு

படம்
கருப்பி  காட்டிய வெண்ணிற பற்களில் பூத்த  குறுநகை எல்லாம் இராப்பொழுதில்  இரகசியமாய்  வந்து போகும் நட்சத்திர கூட்டத்தின் அழகிய அணிவகுப்பே

மானுட இச்சை

படம்
மானுட பயலாய்  மண் சேரும் உயிரெல்லாம்  மனம் கொண்ட மாந்தரின்  இச்சையே       மண் சேர்ந்த பின்னே  மழலையில் மனமகிழ மரப்பாச்சி பொம்மையில்  இச்சை  மண்தொட்ட பின்பு  கண் கண்ட தூரம் வரை கால் சுற்ற  இச்சை  நாக்குளரலில் நான்கு சொல்  நா விட்டு போனால்  நாலந்தா முதல்  நாசா வரை சேர்க்க  நம்மை  தந்தோருக்கு  இச்சை  நால்வர் கூட்டம்  நட்பில் கொண்டால்  குட்டி குறும்பாய்  அரும்பிட  இச்சை  கதையும் கணக்கும் கருத்தில் கொண்டு  சிறு மதிப்பெண் கூட்டி   சிரசு உயர் கொள்ளவும்  சிறு நேர இச்சை  பட்டம் பெற்று பல திட்டம் தீட்டிட  தினம் கல்லூரி  கல்வியியை கற்றிட இச்சை  கடை கல்லூரி  காலம் கழியும்  கணத்தினுள்  காதல் பேரில் –சில  காலம் கொண்டிட  இச்சை  சித்தம் தெளிந்து  சில சில்லறை  சேர்க்க புது  செய்கைகள்  செய்திட   இச்சை  செய்கையின்  சேர்க்கையில் சேர்த்த சில்லறை  சிலிர்ப்பில் புது  ச...

சௌசாலயம்

படம்
  நலம் வேண்டி வலம் சுற்றி திருத்தலம் போற்றி நளபாகம் ருசித்து நைய்ய புடைத்து நாவிரல் நக்கி பக்தியில் மூழ்கி முழங்கால் நனைத்து நாமம் ஜபித்து நமஸ்கரிப்பதில் மட்டும் கிட்டுவதில்லை சில வாழ்வியல் வளங்கள்   மாறாய் வள்ளுவன் வாக்கில் வணங்கி சோறை குடித்து நீரை புசித்தலே நீடித்த வாழ்விற்கு வளம் சேர்க்கும் வழிகளாம்.   கூடுதலாய் குடல் சேர்க்கும் குப்பைகளை கூட்டி வரி மலம் வார்க்கும் மார்கமெல்லாம் மாக்கோயிலே மாந்தர்க்கு.   தமிழ்குடி தட்டும் தளங்கள் எல்லாம் திருத்தலம் காணும் கருத்துடனே   உடல் சேரா உபரிகள் நீக்கி உயிர் உய்ய உரம் சேர்த்து உளவு செய்ய ஓர் களம் செய்வோம் ; குடல் கொள்ளா குளம் நீக்க மனை கொள்ளும் சௌசாலயங்கள் சுகம் காக்கும் சூத்திரங்கள் ;   ஆலயம் செய்வோம் சௌசாலயம்   செய்வோம் மனைகளில் கொள்வோம் இதை நம் மனதிலும் கொள்வோம் ;

மகளை பெறும் மகராசன்

படம்
மனங்கொண்டவள் மணமேடை கண்டபோதே  மாகளிம்பும் மனதில் குடிகொண்டது  குடைகூலி குடுக்காமலே ;  குலவிக்காக கலவி செய்து  காத்திருந்த கனமெல்லாம் காதலியின் கதைப்புகள் தன்   கரு கொண்ட திரு ஒற்றியே ; கண்ணனோ ? அவள் காதலியோ ? என  காத்திருப்புகள்  புதிர்கொள்ள செய்தன. மனங்கொண்ட மகராணி  மாதவனை தன் வசம் அழைத்து  வம்சத்தின் வசம் சேர  வயிறு கொண்டது  வள்ளுவனோ ? வாசுகியோ ? என மொழி வினாவினாள் ; ஓவியனோ  வரையோலையை  வசம் இழுத்து வாசம் பிடித்து  உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்து  வரையோலை வயிறு கொண்டது  வாசுகின் வரவிற்கென  வாஞ்சை கொண்டான். காகிதத்தில் தமிழ்  கருத்தளங்கள்  கொணர்ந்து கொட்டும் கவிஞனே, வாசுகியின் வசம் வாஞ்சை கொண்டு  வரம் தரும் என்  வள்ளுவனே,  ஆண் மகவு கொள்ளும்  ஆவல் கொள்ளாது  தையலை உனக்கே  உரித்தாகும்  விந்தை கூறு. என் சிறந்தவளே, தோழியே, நின் தசையில் ஓடி  வித்தில் கலந்து  விண் செல்லும்  வினை செய்யோள் வரம் தேடும்  விந்தை சொல்வேன்  கேளாய்  நின்...