வீர வாழ்க்கை

 

அண்டத்தில்

பிண்டங்கள்

பிருதிவி

கொணர்ந்து

கொட்டுவதெல்லாம்

எதற்காக ?

கூடி குலாவி

குழவி தந்து

கூடு சேர்த்து

காடுகள் செல்ல மட்டுமோ ?

அல்ல அல்ல

 

இன்று

பிறக்கும்

பிருதிவி கொண்ட

பிண்டதிற்கெல்லாம்

அண்டத்தில் ஓர்

அகராதியே

இருக்கிறது.

 

அது

தன்னை

அறிதலாம்.

தையல் வையத்தில்

வனம் சேர்ந்த நாள்

தொட்டு அவர்

தொட்ட

உச்சங்கள்

சொச்சமல்ல,

சொச்சமல்ல.

 

மண் தொட்டு

மகிழ்வுற்று

மரபாச்சியில்

மனமுற்று

பின்

பூப்பெய்தி

புடவை கட்டி

பொட்டு வைத்து

சமிக்கைகளில்

சொல்லிவைத்து

வரன் பார்த்து

உயிர் சேர்த்து

உயிர் தந்து

போவதற்கல்ல

இந்த வாழ்க்கை

 

மாறாய்

பள்ளி சென்று

பட்டம் பெற்று

பதவி கொண்டு

பட்சியாய் பறந்து

பட்டறிவு

பல பெற்று

பார் சுற்றி

பார்வை தரும்

கோணக் குறிப்பறிந்து

கபால ஓட்டினுள்ள

கருவி தரும்

கருத்தின்  வழி

காதல் செய்து

மீண்டுமோர்

நீட்சியாய்

நின் நிலத்திற்கோர்

வீர விதையிட்டு

தன்னை அறிந்து

தளரும் வயதிலும்

விதைகளை

விருட்
சமாக்குதல்

வீர வாழ்க்கை.

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்