கிழவனுக்கு வேற வேல இல்ல


படம் பார்த்து
பட்டாடை உடுத்தி 
பன்மாலை மாற்றி 
திருக்கல்யாணம் செய்து 
முகம் பார்த்து 
முத்தமிட்டு 
முனங்கள் செய்து
முன்னோர் வழி 
முத்துகள் பெற்று,
முனைப்பாய் வளர்த்து 
குலம் காக்க 
கூடு சேர்த்து,
கூரை பாயின் 
குறுக்கே அமர்ந்து 
குலப்பெருமை பேசும் 
என்னவளின் 
கன்னத்தில் விழும்
எச்சில் துளி 
ஒரு மொழி பேசி செல்லும்  
“கிழவனுக்கு வேற வேல இல்ல” என்ற 
அந்த 
வாஞ்சை வார்த்தையில் 
வளரும் அந்த காதல்

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்