மகளை பெறும் மகராசன்
மணமேடை கண்டபோதே
மாகளிம்பும் மனதில் குடிகொண்டது
குடைகூலி குடுக்காமலே ;
குலவிக்காக கலவி செய்து
காத்திருந்த கனமெல்லாம்
காதலியின் கதைப்புகள் தன்
கரு கொண்ட திரு ஒற்றியே ;
கண்ணனோ ?
அவள் காதலியோ ? என
காத்திருப்புகள்
புதிர்கொள்ள செய்தன.
மனங்கொண்ட மகராணி
மாதவனை தன் வசம் அழைத்து
வம்சத்தின் வசம் சேர
வயிறு கொண்டது
வள்ளுவனோ ? வாசுகியோ ?
என மொழி வினாவினாள் ;
ஓவியனோ வரையோலையை
வசம் இழுத்து வாசம் பிடித்து
உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்து
வரையோலை வயிறு கொண்டது
வாசுகின் வரவிற்கென
வாஞ்சை கொண்டான்.
காகிதத்தில் தமிழ்
கருத்தளங்கள்
கொணர்ந்து கொட்டும்
கவிஞனே,
வாசுகியின்
வசம் வாஞ்சை கொண்டு
வரம் தரும் என்
வள்ளுவனே,
ஆண் மகவு கொள்ளும்
ஆவல் கொள்ளாது
தையலை உனக்கே
உரித்தாகும்
விந்தை கூறு.
என் சிறந்தவளே,
தோழியே,
நின் தசையில் ஓடி
வித்தில் கலந்து
விண் செல்லும்
வினை செய்யோள்
வரம் தேடும்
விந்தை சொல்வேன்
கேளாய்
நின் வரவை
நித்தம் நித்தம் தம்
சிந்தையிற்கொண்டு
கர்வம் கொண்ட
உந்தையின்
உளறல்
கேட்டிருப்பாயோ ?
மகவென
மகளை கொண்டு
அமுதூட்டி
அன்பு செய்து
ஆர்பரித்து
உயிர் உலாவி
உவகை கொண்டு
தனம் சேர
தமிழ் தந்து
களம் சேர
பேராண்மை கொணர்ந்து
யுகத்தில் யுவன்
கொள்ளும் யுக்தி
சொல்லி,
சொல்லாடும்
செல்ல குழவி
குரல் கேட்டு
குதுகலிக்கும்
மகளை பெற்ற
மகராசன் தான்
உந்தை ;
இனி
யானும் அஃதே
ஆவலுடன்
எனை யாளும்
ஆண்டளுக்காக .
கருத்துகள்
கருத்துரையிடுக