மானுட இச்சை
மானுட பயலாய்
மண் சேரும் உயிரெல்லாம்
மனம் கொண்ட மாந்தரின்
இச்சையே
மண் சேர்ந்த பின்னே
மழலையில் மனமகிழ
மரப்பாச்சி பொம்மையில்
இச்சை
மண்தொட்ட பின்பு
கண் கண்ட தூரம் வரை
கால் சுற்ற
இச்சை
நாக்குளரலில்
நான்கு சொல்
நா விட்டு போனால்
நாலந்தா முதல்
நாசா வரை சேர்க்க
நம்மை தந்தோருக்கு
இச்சை
நால்வர் கூட்டம்
நட்பில் கொண்டால்
குட்டி குறும்பாய்
அரும்பிட
இச்சை
கதையும் கணக்கும்
கருத்தில் கொண்டு
சிறு மதிப்பெண் கூட்டி
சிரசு உயர் கொள்ளவும்
சிறு நேர
இச்சை
பட்டம் பெற்று பல
திட்டம் தீட்டிட
தினம் கல்லூரி
கல்வியியை கற்றிட
இச்சை
கடை கல்லூரி
காலம் கழியும்
கணத்தினுள்
காதல் பேரில் –சில
காலம் கொண்டிட
இச்சை
சித்தம் தெளிந்து
சில சில்லறை
சேர்க்க புது
செய்கைகள்
செய்திட
இச்சை
செய்கையின்
சேர்க்கையில்
சேர்த்த சில்லறை
சிலிர்ப்பில் புது
சிநேகம் ஒன்றை
காதலாய் கொண்டிட
இச்சை
கொண்ட காதலை
கொண்டு செல்லும்
காலம் வரை
கரம் பற்றி
காத்திட
இச்சை
காதல் களிப்பில்
கூடி திரிந்து
குவளை கொண்டு
திரு பல தந்து
கூட்டி திரிந்து
கூடு சேர்த்திட
இச்சை
கூட்டில்
குயில்கள்
கூடி திரியும்
குறிகள் கண்டு
நிறை மனம் கொண்டு
நிலம் சேர
இச்சை
எத்துனை இச்சையை
மனம் கொண்ட போதும்
மனதின் மாண்பை
மனம் கண்ட போதலே
மெய்யான இச்சையாம்
மாந்தர் நாளிலே.
கருத்துகள்
கருத்துரையிடுக