சௌசாலயம்
நலம் வேண்டி
வலம் சுற்றி
திருத்தலம் போற்றி
நளபாகம் ருசித்து
நைய்ய புடைத்து
நாவிரல் நக்கி
பக்தியில் மூழ்கி
முழங்கால் நனைத்து
நாமம் ஜபித்து
நமஸ்கரிப்பதில்
மட்டும் கிட்டுவதில்லை
சில வாழ்வியல்
வளங்கள்
மாறாய்
வள்ளுவன்
வாக்கில்
வணங்கி
சோறை குடித்து
நீரை புசித்தலே
நீடித்த வாழ்விற்கு
வளம் சேர்க்கும்
வழிகளாம்.
கூடுதலாய்
குடல் சேர்க்கும்
குப்பைகளை
கூட்டி வரி
மலம் வார்க்கும்
மார்கமெல்லாம்
மாக்கோயிலே
மாந்தர்க்கு.
தமிழ்குடி
தட்டும்
தளங்கள் எல்லாம்
திருத்தலம்
காணும்
கருத்துடனே
உடல் சேரா
உபரிகள் நீக்கி
உயிர் உய்ய
உரம் சேர்த்து
உளவு செய்ய ஓர்
களம் செய்வோம் ;
குடல் கொள்ளா
குளம் நீக்க
மனை கொள்ளும்
சௌசாலயங்கள்
சுகம் காக்கும்
சூத்திரங்கள் ;
ஆலயம் செய்வோம்
சௌசாலயம் செய்வோம்
மனைகளில் கொள்வோம் இதை
நம் மனதிலும் கொள்வோம் ;
மிக அருமை.... சிறப்பு
பதிலளிநீக்கு