இடுகைகள்

அது ஒரு மழைக்காலம்

படம்
குடை பிடித்து  குறுக்கிட்ட  குறுகிய வான் பயணங்கள்  இப்படியும் இருந்தன  வான் சுரந்த மண்  நாசி வழியே ஞானம் கண்டன  குட்டையின் தேக்கத்தில் சற்று  சேட்டைகள் மிகுந்தே இருந்தன  ஒட்டு குடிசை ஓரம்  சொட்டும் ஓசை ஓர்  சொப்பன ஸ்வரத்தை  சொல்லிச் சென்றன  தட நடையும்  தட தட ஓட்டமும் காணும்  தார் சாலைகள் இன்று -குப்பை  வேர் அகற்றி  வெறி சோடியிருந்தன  காலம் கடந்தாலும் சில  காகித கப்பல்கள் குட்டையில்  முந்திக் கொண்டு  நீந்தி இருந்தன- நீர்  சொட்டிய சொக்காய்கள்  சோலை அடியில்  சோம்பல் முறித்தன.  ஈரம் சொட்டிய  மயிர்கள் மங்கையின்  கன்னங்களை கவ்விப் பிடித்திருந்தன  மழை குடையான  நிழற்குடையிலிருந்து  நீட்டிய கைகள் சற்று  மழையைக் கட்டி பிடித்திருந்தன  கவிஞன் கண்ட  கத்தும் குயிலின்  குத்தும் இறக்கைகள்  குத்தாட்டம் போட்டே  கொஞ்சி இருந்தன  கார் மேக  கருத்தரிப்பில் சில  கவிதைகள் இப்படியும்  உயிர் கொண்டிருந்தன

மௌனம்

படம்
சோனாவின் கலை வார கொண்டாட்டத்தில் கொணர்ந்த மெளன ராகமிது  மௌனம் மோதிக் கொள்ளும் மனதின் மோட்ச நிலை இரு விழி இருண்டு காதுகள் கரைந் தோய்ந்து வாய் மொழி வழக்கொழிந்து உள்ளொளி நோக்கும் உன்னத நிலையே மெளனம் ஆகும் கோடிக்கணக்கான நினைவுகள் கொட்டி கிடக்கும் குப்பை கலவை இந்த மௌனம் ஆம் குப்பை கலவை தான் இதில் தீதும் உண்டு தீந்தமிழும் உண்டு தீந்தமிழைத் தேன் என்றும் தீச்சுடரென்றும் நன்றென்றும் கொள்பவன் நான் ஆதலால் இதில் தீதும் உண்டு தீந்தமிழும் உண்டு முட்டி மோதி திட்டி தீர்த்துக் கொட்டி கலக்கும் சமுத்திரம் இந்த மெளனம் மௌனத்தின் முற்றம் சொல்லும் செயலும் அச் சொல்லும் செயலும் நம் தீந்தமிழ்போலே இனித் திடல்  வேண்டும் தேசியம் காத்து தழைத்திடல் வேண்டும் மெளனம் கொள்வோம் தீவினை கலைத்து தீந்தமிழ் பொருத்தி தீச்சுடராய் தேசியம் காப்போம் வாழ்க பாரதம்

மரமும் மனிதனும்

படம்
மழை அரிப்பில் வந்த உயிர்ப்பே- இந்த விதையின் வேர்கள் வேர்திடாத வேர்களின் குளை கிளைகளே இந்த குச்சிகள். குச்சிகளிலும் குளர் கதிர்கள்  உண்டு அது குள்ள கதிராய் அமைவதும் உண்டு குள்ள கதிர்கள் குலை இலை காண்பதுண்டு மண் பிடிப்பால் இலை கண்ட தோட்டத்து அரசிகள் ஒரு தலையாய் இரு தலையாய் - மலரும்  காதல் கொணரும் மலராய் மலர்வதுண்டு  மலர்வதெல்லாம் கனிவதற்கே - பின் கவர்ந்து முகர்ந்து காதலாய் பசிந்து புசிந்து பின் எச்சமாய் எரிந்த பின் கொடி மரத்தின் வேரில் உயிர்பதே விதையும் விதையின் விரியமும் அமைந்தமையே அகிலத்தில்  அழகு பார் .

உழவர் திருநாள்

படம்
பழையன கழிதலும் புதியன புகுதலுமே புரட்சியன கொள்வதுண்டு  அப்புரட்சிதனை போரடித்து நெற்காத்து நேர்நிமிர்த்தி ஊண் சமைத்து உண்டு களிப்பதே உழவர் வினையாம்; கண்ட விளைச்சலிலே களை திருத்தி கதிர் அறுத்து களம் சேர்த்து இனம் காப்பான் காவலாளி-ஆம் ,அவன் மானிட இனத்தின் காவலாளிதான் பசிப்பிணி போக்கி பார் காக்கும்  பண்டத்தின் படைப்பாளியை பறையடித்துக் பொங்கலிட்டு பொற்றிடுவோம் தமிழினத்தை காத்திடுவோம்

மண் வாசனை

படம்
கருத்த வானத்தால் இடிந்த மேகங்கள் மழைதுளிகள் துள்ளி  திரிந்த துளியின் துளையிட்டு நிலைதான் மண்வாசனை மாரியின் மண் தழுவல் மனமெல்லாம் மகிழ்வுட்டும் மனக்கோலத்தின் ஆதியெல்லாம் மண்வாசனையே  உரித்து ஊரி செரிந்து சேரியாய் செழிக்கும் திடத்தின்  வாயுவாய் அமந்தமையே மழை கொள்ள துளிகள்,உலர் துணிகள் சாரல்-மூக்காடும் சாக்கடைகள் என பலவான போதிலும் மழை  மனம் கொள்வது மண்வாசனையில்தான் ஒலி கெட்டு போனலும்  ஒளி கெட்டு போனலும் ஓங்கி நிற்பது முகர் தரும் வசனைதான் ஆழி சூழ் உலகின் அடிநாதமாய் விலங்கும் மூச்சிலே முடிந்திருக்கும் மண்வாசனை ஆழிக்கும் அறிவூட்டும் அழகு பார்

காதல்

படம்
தமிழனும் தமிழச்சியும் தழைத்தோங்க குலம்காத்து தவபுதல்வர்கள் தமையீன்று தரணி எல்லாம் தனம் சேர்க்க தெள்ளியதோர் சிந்தை பொருத்தி தமிழர் பால் காதல் கொள்வோம்; காதல் காலம் கழியா  காலபெட்டகம் என கூடி முழங்கிடுவோம், காதல் கருத்தியல் கொணரும்  கட்டட்ற மேதா விலாச மூலை மடிப்பில் மையம் கொள்ளும் மயக்கம்தான் என இறுமாப்புரைப்போம், மங்கா ஒளியுடன் மகிழ்ந்திருப்போம்.

பெண்

படம்
பேரிருளின் பிளப்பாய்  பேதையாய் பிறப்பெடுத்து உரம் பெற்று உதிரம் போக்கி உரு மாறி பெதும்பையாய்  போற்றுவித்து மலர்சூடும் மங்கையாய் மனமுவந்து மணமுடித்து மழலைபெற்று மாண்புயர்த்தி மகுடம் தறிக்க மடந்தையாய் மனமேற்றி மாநெறி காத்து ஆழி சூழ் அண்டத்தின் அறிவை அரிவையாய் தெரிவையாய் உணர்ந்தமையால் பேரிளம்  பெண்மையை அடைந்தே பெருங்களிப்படைபவள் நீ.....