நட்பின் நாட்டியங்கள்




அயலானாய்

அகர கூடத்தில்

அமர்ந்திருந்தேன்

இது நானோ  ?

இல்லை இதிகாச பிதற்றலோ ? என மன

இல்லமெல்லாம் சிந்தை பின்னல்கள்- பின்

இல்லை என தெளிவுற்று

இனியவரை இனம் காண

இனித்தேன் ;

 

கண்டேன் கன்னி ஒருத்தியை

கவி பாரதியின் கன்னியோ இவள் என

என்னுள் கதைத்தும் கொண்டேன் ,

காலங்கள் கலாய்ப்பாய் கரைதல்

கண்டு யானும் கலைந்து

கலாய்த்தோர் வசம்

கலந்தேன்

 

தாடிக்காரன்

சீண்டல்கள் சில நேரம்

சீற்றம் கொள்ள செய்தாலும் –அவன்  நற்

சிந்தை கொண்டு இணங்கி

பிணைந்திருதேன்

 

அச்சிந்தை சில

அன்பர்களை

நண்பர்களாய்

இனம் கண்டு தந்தது.

 

இப்படியும் மாந்தர்

இருப்பரோ மாநிலத்தில் என

நினனக்கும் பொறுத்து அவர்தம்

வினைகள் விந்தயாகியது.

 

நட்பிற்கும் கலங்கும் கண்ணன்,

பாசத்தில் பீச்சிடும் பச்சிளங் குழந்தை,

குளிருக்கு மூட்டிய தீ போல்

குறும்புகளால் மனம் கொண்ட மாந்தன்,

சிரிப்பில் தன் குறிப்பெழுத

சிலிர்த்த சினை கண்ட சிங்காரி,

ஊண் சோற்றிற்கு

உமிழ் நீர் சுரக்கும் சுந்தரி ,

லொள் என்ற நாய் குறைப்பின்

ஞொயத்தில் தாய் விளிக்கும்

தமிழ் தந்த

ஆங்கில மொழி   

திருத்தி ,

மலைகோட்டை

மருவி செல்லும்

மகள்

இவர்கள் சந்திப்பில்

சந்தை களைகட்டியது

சிந்தை சிலிர்ப்பில்

சில வருடம்

லாபித்து லயப்பட்டது.


அது இன்று

ழகரத்திலும் சில

எழுத்துகளை

கோர்த்து

கொணர்ந்திருக்கிறது

கொடையாய்

மனம் கொள்ள ......

 

 

 

 

 

 

 

  

 


கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்