மாதரை போற்றுவோம்


உதிரத் துளிகள் 

உலகிற்கு  உவகையை 

தந்த வண்ணம் 

உள ;


செவி  தொடும் 

மழலை சொற்கள் 

குழலையும் 

யாழையும் 

ஏறிட்டு 

பார்க்க வைப்பதில் 

பாரபட்சம் பார்ப்பதில்லை ;


உயிர் கலக்கும் 

மெய் உரசல் எல்லாம் 

உயிர்மெய்யை 

எல்லா காலத்திலும் 

தந்து செல்வதில்லை ;


அது அப்படி

ஆகி போதலும் 

அமைத்தவன் செயலே, 

அதை உணராது 

மாதர் மனம் நோக 

மாமொழி வசைகள் 

எதற்கு ?


புவி சேரா 

பிண்டத்தை 

பிழையென சூட்டும் 

பிதற்றல்கள் வேண்டா .


மழலை கொள்ளா 

மாந்தரும் மாந்தரேயென 

மாநெறி காத்தல் - நம் 

மாண்பிற்கு அழகு 

மாதரை போற்றுவோம்

சில நேரத்திலேனும் 

அவர் தம் 

மனங்களையும் .

 





 










கருத்துகள்

  1. வலைதமிழ் நடத்தும் கதை மற்றும் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு 1000 ரூபாய் வரை வெல்லுங்கள். https://valaithamil.com
    இனி தமிழில் டைப் செய்வது மிகவும் எளிது https://valaithamil.com/phonetic.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்