மதிப்பிற்குரிய மணமகளுக்கு
ஒரு பூ
புலம்பெயர்கிறது
புன்னகையுடன்
தன் குளத்திற்கு
வளம் சேர்க்க,
புலம் பெயர்ந்த பின்னும்
வளம் சேர்க்கும் பூவோ இது ?
ஆம் , புலம் பெயர்ந்தாலும்
நற்குளம் கண்டு
குலை தந்து
குணம் காத்து
குணவதியாய்
புகழ் சேர்க்கும் பூவிது.
பூவினை நேசிக்கும் காதலன்
பூலோகத்தில் உண்டல்லோ ?
இதில் என்ன விந்தை ,
இங்கு காதலனை நேசிக்க
பூக்களே பூத்து
புலம் பெயர ஆவல்
கொண்டுள்ளபோது ?
விந்தையில்லை
விந்தையில்லை.
பூவே ,
புலம் பெயரும்
குளம் நினக்கு ஓர்
பெருங்களம்.
பெருமை கொள்வாய், அவ்வண்ணமே
பொறுமையும் கொள்வாய்.
குளம் நின்னை
கொணர்தவனை மட்டும்
கொண்டு முடியவில்லை
அது அழகாய்
அவன் வழி கண்ட
ஆலமார விழுதுகளையும்
அடக்கியுள்ளது .
விழுதுகள் உனக்கு
விகராமாய் தோன்றலாம்
விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்
ஆயினும் அவர்களும் ஒரு
விதை தந்த விழுதுகளே,
நின் குணத்தால்
நித்தமும் பூத்து
புகழ் சேர்ப்பாய்
பூவியில்.
மனம்கொண்டவன் –நின்
மாதவன்
மனம் பிறழ்ந்து
மொழி பகிர்ந்தாலும்
மனம் கோனாது-நீன்
மைய்யலில் மைய்யம்
கொண்டிருப்பாய்.
பூவே இன்னுமும்
சொல்வேன் கேளாய் ,
இந்த பூ புவியில்
பூத்தது புலம் பெயரவும்
மனம் பகிரவும் மட்டுமல்ல
மகரந்த சேர்கையிலும்
மனம் கொண்டு
மண்ணிற்கோர்
மகள் தந்து
தமிழ் தருவாய்.
தமிழ் தந்த நின்னை
யாம் வேறென்ன
கேட்க ,
தமிழிலே வீரம் ,
தனம் ,காதல் ,
களவு ,கல்வி,
கலவி, சுவை,
களஞ்சியம், கருத்தளம்
என யாவும்
உளதே
போதும் பூவே
இனி
ஆதியில் புலர்வாய்
அந்தியில் நின் ஆதவன்
தோல் கொள்வாய்
தளர்வாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக