எஞ்சாமி
அமுதமும் அலுவலும்
அன்னையும் அய்யனும்
கொண்டவளும்
அவள்பால்
உண்டவளும்
இயற்கையும்
அதில்
இசைந்த
இசையும்
செடியும்
கொடியும்
அது
கொண்ட
ஆடும்
மாடும்
அண்டமும்
பிண்டமும்
அருவமும்
உருவமும்
கனவும்
கல்வியும்
கலவியும்
காமமும்
காதலும் சாதலும்
கள்வனும்
கண்ணனும்
தனமும்
தானியமும்
காசும்
கருத்தளமும்
தலைவனும்
தலைவியும்
தரணி
வாழ்
மாந்தர்கள்
மைய்யல் கொள்ளும்
எம் மொழி
தமிழும்
கடவுள்கள்
எனக் கொண்டாடும்
அகிலத்தில்
அன்பையும் அறிவையும்
அண்டத்தாரை
ஆளும்
ஆண்டவனாய்
கொள்வது
எம் சிந்தைபோக்கு .
கருத்துகள்
கருத்துரையிடுக