இடுகைகள்

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து...

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

நட்பின் நாட்டியங்கள்

படம்
அயலானாய் அகர கூடத்தில் அமர்ந்திருந்தேன் இது நானோ   ? இல்லை இதிகாச பிதற்றலோ ? என மன இல்லமெல்லாம் சிந்தை பின்னல்கள்- பின் இல்லை என தெளிவுற்று இனியவரை இனம் காண இனித்தேன் ;   கண்டேன் கன்னி ஒருத்தியை கவி பாரதியின் கன்னியோ இவள் என என்னுள் கதைத்தும் கொண்டேன் , காலங்கள் கலாய்ப்பாய் கரைதல் கண்டு யானும் கலைந்து கலாய்த்தோர் வசம் கலந்தேன்   தாடிக்காரன் சீண்டல்கள் சில நேரம் சீற்றம் கொள்ள செய்தாலும் –அவன்   நற் சிந்தை கொண்டு இணங்கி பிணைந்திருதேன்   அச்சிந்தை சில அன்பர்களை நண்பர்களாய் இனம் கண்டு தந்தது.   இப்படியும் மாந்தர் இருப்பரோ மாநிலத்தில் என நினனக்கும் பொறுத்து அவர்தம் வினைகள் விந்தயாகியது.   நட்பிற்கும் கலங்கும் கண்ணன், பாசத்தில் பீச்சிடும் பச்சிளங் குழந்தை, குளிருக்கு மூட்டிய தீ போல் குறும்புகளால் மனம் கொண்ட மாந்தன், சிரிப்பில் தன் குறிப்பெழுத சிலிர்த்த சினை கண்ட சிங்காரி, ஊண் சோற்றிற்கு உமிழ் நீர் சுரக்கும் சுந்தரி , லொள் என்ற நாய் குறைப்பின் ஞொயத்தில் தாய் விளிக்கும் தமி...

புகைப்படங்கள்

படம்
காலத்தை கரைக்காமல் கதை சொல்லும் கலைஞன் காண ஒலியிலும் கானம் சேர்க்கும் கலைஞனின் கருப்பொருள் காணென காட்டி களிப்பு தரும் கண்ணாடி புகைப்படங்கள்

மாந்தரின் மாந்தர்கள்

படம்
உயிர் உய்ய ஊண் மருவி  உடல் சேரும் உறவுகளே மருந்தென்போம் –   அவ் உறவுகளின்    உருத்தரிந்து உயிர்நாள்   உய்விக்கும் உலகத்தின் நாயகர்கள் இவர்கள் பிணி பல   பிணைந்திடினும் பிரியமுடன்   முன் வந்து பிணி நீக்கி வினை செய்யும் விந்தையர்   நம் மருத்துவர்கள் பிண்டமாய் பிறப்பெடுக்கும் பிறவிகளை பிரசவம் செய்து பிருதிவி கொணரும் பிரியர்கள் நம் செவிலியர்கள் ஞாலத்தில் ஞாபகம் கொண்ட நாள் முதலும் கண்டதில்லை   இப் பெருநோயை கொள்ளை நோய் கண்டாலும் கலங்காது களப்பணி கண்டு வரும் கருணைமிகு காவலாளிகள்   நம் கலைஞர்கள் ஆம் கலைஞர்கள்தான். சினை கண்ட   தாய்க்கெல்லாம் சிதையாது சிலை வார்க்கும் சிந்தை கொண்ட மாந்தர்களை கலைஞரென கதைக்காமல்   வேறென்ன கதைப்பது ? கதைப்போம்   இக் களப்பணி வீரர்களையும் கலைஞர் என்றே நாவினிலே   நளபாகத்தின் நாட்டியத்தை மீட்டெடுப்போரை. வாழ்த்தியும் வணங்கியும்.   

பெண் மயிலின் தோகைகள்

படம்
அன்றொருநாளில் அழகிய வானில் அலைந்த மயில்கள் அண்டதில் இடம் தேடி என் அருகில் அமர்ந்தன பிடாரி மையிரை பிடித்தது போலே பின்னங் கழுத்தை பிசைந்து கொண்டு பின் அடி கண்டது வீசிய காற்றின் விகாரம் கொண்டு விண்ணோக்கி ஓர் வினை செய்தது தோரணம் தொடுத்த தோரணை கொண்டு இறக்கை விரிக்க ஓர் இடம் கண்டு கொண்டது அருகில் இருந்த அழகின் ஆணையில் உடலை உலுக்கி ஓர் உவகை தந்தது தொண்டையின் ஓசையில்   தொடங்கி கொண்டையில் சிலிர்ப்பில் பல தோகைகள் தோரணம் கொண்டது அச்சிறு பொழுதில் என் மனம் மையம் கொண்டதெல்லாம்   பெண் மயிலின்   பேராண்மையில் தான் இயற்கையின் இசைவில் தோகைகள் துறத்து தோரணம் மறந்தாலும் சோர்வுறாது சினை கொண்டு சிறகடிக்கும் ஆண்மயில் ஈன்று இறுமாப்புடன்   திரியும் பெண்மையிலே ! நின் வினை நிலத்தினில் பெரிது வாழ்க நீ மன மகிழ்வோடும்- ஆண் மயிலோடும்.

நட்பதிகாரம்

படம்
இயந்திரவியல் துறையில் இணைந்த காலத்தில் இன்னது செய்வதெனத்   தெரியாமல் கழிந்தன நாட்கள். கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும் காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது. இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில் இணைக்கப்பட்ட இருபத்தெட்டின் இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது. நட்பென நால்வருடன் நல்கிய போதிலும் நான் தேடிக் கண்டது என்னை , என்னைப் போல் நின்னை. அங்கொரு மூலையில் கதவுகள் திறக்கும் காற்றோசையின் பின்னால் கருநிற கண்ணன் ஒருவன் காத்திருந்தான் – என்னுள் கலக்கக் கதைத்திருந்தான். எனக்குப் பின்னால் அமர்ந்து எர்ணாகுலம்   வந்தாய் என எந்நாளும் சொல்லி வியக்கும் எம் எண்ண மொழிகள் அங்கொரு மூளையில் சாரை எறும்புகள் சீனி தேடி ஒரு யாத்திரை சென்றன யாத்திரை யாமத்தில் யானும் சேர்ந்தேன் யாத்திரை கொண்டேன் நின்னை அடைந்தேன் பின் கண்ட காட்சி எல்லாம் கவிக்கத்   தான் வேண்டுமோ? சாகா வரம் தந்து சகாப்த நட்பிற்கு வித்திட்டாய் இது போல் சாட இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன் யானும் அஃதே     நாம் கொண்...