பெண் மயிலின் தோகைகள்


அன்றொருநாளில்
அழகிய வானில்
அலைந்த மயில்கள்
அண்டதில் இடம் தேடி என்
அருகில் அமர்ந்தன

பிடாரி மையிரை
பிடித்தது போலே
பின்னங் கழுத்தை
பிசைந்து கொண்டு
பின் அடி கண்டது

வீசிய காற்றின்
விகாரம் கொண்டு
விண்ணோக்கி ஓர்
வினை செய்தது

தோரணம் தொடுத்த
தோரணை கொண்டு
இறக்கை விரிக்க ஓர்
இடம் கண்டு கொண்டது

அருகில் இருந்த
அழகின் ஆணையில்
உடலை உலுக்கி ஓர் உவகை தந்தது
தொண்டையின் ஓசையில்  தொடங்கி
கொண்டையில் சிலிர்ப்பில் பல
தோகைகள் தோரணம்
கொண்டது

அச்சிறு பொழுதில் என்
மனம் மையம் கொண்டதெல்லாம்  
பெண் மயிலின்  பேராண்மையில் தான்

இயற்கையின் இசைவில்
தோகைகள் துறத்து
தோரணம் மறந்தாலும்
சோர்வுறாது
சினை கொண்டு
சிறகடிக்கும் ஆண்மயில்
ஈன்று
இறுமாப்புடன்  திரியும்
பெண்மையிலே !

நின் வினை
நிலத்தினில் பெரிது
வாழ்க நீ
மன மகிழ்வோடும்- ஆண்
மயிலோடும்.

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

அவர் தான் பெரியார்