நட்பதிகாரம்





இயந்திரவியல் துறையில்
இணைந்த காலத்தில்
இன்னது செய்வதெனத்  தெரியாமல்
கழிந்தன நாட்கள்.

கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும்
காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது.
இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில்
இணைக்கப்பட்ட இருபத்தெட்டின்
இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது.

நட்பென நால்வருடன்
நல்கிய போதிலும்
நான் தேடிக் கண்டது
என்னை ,
என்னைப் போல் நின்னை.

அங்கொரு மூலையில்
கதவுகள் திறக்கும்
காற்றோசையின் பின்னால்
கருநிற கண்ணன் ஒருவன்
காத்திருந்தான் – என்னுள்
கலக்கக் கதைத்திருந்தான்.

எனக்குப் பின்னால் அமர்ந்து
எர்ணாகுலம்  வந்தாய் என
எந்நாளும் சொல்லி வியக்கும்
எம் எண்ண மொழிகள்

அங்கொரு மூளையில்
சாரை எறும்புகள்
சீனி தேடி ஒரு
யாத்திரை சென்றன

யாத்திரை யாமத்தில்
யானும் சேர்ந்தேன்
யாத்திரை கொண்டேன்
நின்னை அடைந்தேன்

பின் கண்ட காட்சி எல்லாம்
கவிக்கத்  தான் வேண்டுமோ?
சாகா வரம் தந்து
சகாப்த நட்பிற்கு வித்திட்டாய்
இது போல் சாட
இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன்
யானும் அஃதே   

நாம் கொண்ட நட்பும்
நாவிட்ட நளபாகமும்
அந்த அம்பானி கடைக்குத்  தெரியும்

நமக்கே உரித்தான
நகைச்சுவை  பாஷையெல்லாம் இனி
நம்மைத்  தவிர்த்து அந்த
ஏர்டெல்காரனும் அறிவானோ ?

இனி நட்புகள் நாளும் அவன் வழி கொண்டோ ?
ஏதாயினும்  கொள்வோம்
நட்புகள் நாளும்
நலமிட நாம்
நமக்கே
நண்பா வாழ்க
நட்பே துணை.



கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்