இடுகைகள்

நட்பதிகாரம்

படம்
இயந்திரவியல் துறையில் இணைந்த காலத்தில் இன்னது செய்வதெனத்   தெரியாமல் கழிந்தன நாட்கள். கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும் காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது. இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில் இணைக்கப்பட்ட இருபத்தெட்டின் இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது. நட்பென நால்வருடன் நல்கிய போதிலும் நான் தேடிக் கண்டது என்னை , என்னைப் போல் நின்னை. அங்கொரு மூலையில் கதவுகள் திறக்கும் காற்றோசையின் பின்னால் கருநிற கண்ணன் ஒருவன் காத்திருந்தான் – என்னுள் கலக்கக் கதைத்திருந்தான். எனக்குப் பின்னால் அமர்ந்து எர்ணாகுலம்   வந்தாய் என எந்நாளும் சொல்லி வியக்கும் எம் எண்ண மொழிகள் அங்கொரு மூளையில் சாரை எறும்புகள் சீனி தேடி ஒரு யாத்திரை சென்றன யாத்திரை யாமத்தில் யானும் சேர்ந்தேன் யாத்திரை கொண்டேன் நின்னை அடைந்தேன் பின் கண்ட காட்சி எல்லாம் கவிக்கத்   தான் வேண்டுமோ? சாகா வரம் தந்து சகாப்த நட்பிற்கு வித்திட்டாய் இது போல் சாட இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன் யானும் அஃதே     நாம் கொண்...

கோடை மழை

படம்
பைந்தமிழ் புலவன் பாட்டினிற் வார்த்த சூரரைப் போற்று சொல்வதைப் போல வெய்யோன் சில்லிகள் வேர்க்க  வைக்கின்றன பொடி நடை கண்ட பொற்தமிழரெல்லாம் மனை தங்கியே வினை செய்து  வருகின்றார்கள் வானம் பார்க்கும் மாந்தரெல்லாம் மன்றாடுவது ஒரு மாரிக்கு தானே தோகை விரித்து தோரணையாய் சிலிர்க்கும் ஆண் மயில் ஆட்டம் காண அணைத்துலகியரும் ஆங்கங்கே ஆதவனிடம் விண்ணப்பம் கோர்கிறார்கள் கொட்டிவிடு மாதவா கோடை மழையாய் -நின் கொடை மனம் கொண்டு -யாம் குதித்து குத்தாட்டம் போட எஞ்சிரு பாதம் கொண்டு....

அவர் தான் பெரியார்

படம்
மானமிழந்த மக்களையும் சிந்தை பொருத்தி சிரசுயர செய்த சீர்திருத்தவாதி பெரியார் ஆரிய மண்ணின் வீரியம் அறுத்து திராவிடம் காத்த தலைவர்  பெரியார் ஜாதி களங்கம் களைத்து  கலப்பு மணங்கள் அமைத்து - ஓர்யுக களம் கண்டவர்  பெரியார் சிகை நகை கண்டு மயங்கிய மகளிருக்கும் மானம் புகுத்தி பட்டபடிப்பும் அதற்கோர் பணியும் பெறுதல் நலம் என விடுதலை விதைத்தவர் பெரியார் சாஸ்திரமும் சம்பிரதாயமும் அகத்தின் ஆக்கபூர்வ சக்தியின் முட்டுக்கட்டையன மூடநம்பிக்கை முடங்க  செய்தவர் பெரியார் அகரம் அளித்த அறிவு கொண்டே அணைத்தையும் பகுத்துணர்வோம் திராவிட வழியினுடே தேசியம் காப்போம்

வாழ்வின் நோக்கம்

படம்
நாதம்  நிறைந்து வித்தாய் ஊற்றெடுக்கும் பிறப்பில் இருபத்தி மூன்றாம்   நிறப்புரி  இணைவில் ஈருடல் ஓருயிராய் தரித்து உதிரத்தை உணவாய் கொண்டே உரம் பெற்று உலகறிய வான் பறந்து கலப்பை  சுமந்தே காடு சென்று கதிர் அறுக்கும் கலைஞர்கள் நாம். களை அறுத்தலும் வினை திருத்தலும் ஞால பயனெனக் கொள்க காலம் செல்ல காதல் கொள்ளக் கலவி செய்யக் கண்கள் கொள்வோம் கருத்துடனே, உயிர் உய்ய, ஊண் கொள்ள, ஊண் சமைப்போம் உலகத்திற்கே- ஓர் கவளம் காதலுடன்

அது ஒரு மழைக்காலம்

படம்
குடை பிடித்து  குறுக்கிட்ட  குறுகிய வான் பயணங்கள்  இப்படியும் இருந்தன  வான் சுரந்த மண்  நாசி வழியே ஞானம் கண்டன  குட்டையின் தேக்கத்தில் சற்று  சேட்டைகள் மிகுந்தே இருந்தன  ஒட்டு குடிசை ஓரம்  சொட்டும் ஓசை ஓர்  சொப்பன ஸ்வரத்தை  சொல்லிச் சென்றன  தட நடையும்  தட தட ஓட்டமும் காணும்  தார் சாலைகள் இன்று -குப்பை  வேர் அகற்றி  வெறி சோடியிருந்தன  காலம் கடந்தாலும் சில  காகித கப்பல்கள் குட்டையில்  முந்திக் கொண்டு  நீந்தி இருந்தன- நீர்  சொட்டிய சொக்காய்கள்  சோலை அடியில்  சோம்பல் முறித்தன.  ஈரம் சொட்டிய  மயிர்கள் மங்கையின்  கன்னங்களை கவ்விப் பிடித்திருந்தன  மழை குடையான  நிழற்குடையிலிருந்து  நீட்டிய கைகள் சற்று  மழையைக் கட்டி பிடித்திருந்தன  கவிஞன் கண்ட  கத்தும் குயிலின்  குத்தும் இறக்கைகள்  குத்தாட்டம் போட்டே  கொஞ்சி இருந்தன  கார் மேக  கருத்தர...

மௌனம்

படம்
சோனாவின் கலை வார கொண்டாட்டத்தில் கொணர்ந்த மெளன ராகமிது  மௌனம் மோதிக் கொள்ளும் மனதின் மோட்ச நிலை இரு விழி இருண்டு காதுகள் கரைந் தோய்ந்து வாய் மொழி வழக்கொழிந்து உள்ளொளி நோக்கும் உன்னத நிலையே மெளனம் ஆகும் கோடிக்கணக்கான நினைவுகள் கொட்டி கிடக்கும் குப்பை கலவை இந்த மௌனம் ஆம் குப்பை கலவை தான் இதில் தீதும் உண்டு தீந்தமிழும் உண்டு தீந்தமிழைத் தேன் என்றும் தீச்சுடரென்றும் நன்றென்றும் கொள்பவன் நான் ஆதலால் இதில் தீதும் உண்டு தீந்தமிழும் உண்டு முட்டி மோதி திட்டி தீர்த்துக் கொட்டி கலக்கும் சமுத்திரம் இந்த மெளனம் மௌனத்தின் முற்றம் சொல்லும் செயலும் அச் சொல்லும் செயலும் நம் தீந்தமிழ்போலே இனித் திடல்  வேண்டும் தேசியம் காத்து தழைத்திடல் வேண்டும் மெளனம் கொள்வோம் தீவினை கலைத்து தீந்தமிழ் பொருத்தி தீச்சுடராய் தேசியம் காப்போம் வாழ்க பாரதம்

மரமும் மனிதனும்

படம்
மழை அரிப்பில் வந்த உயிர்ப்பே- இந்த விதையின் வேர்கள் வேர்திடாத வேர்களின் குளை கிளைகளே இந்த குச்சிகள். குச்சிகளிலும் குளர் கதிர்கள்  உண்டு அது குள்ள கதிராய் அமைவதும் உண்டு குள்ள கதிர்கள் குலை இலை காண்பதுண்டு மண் பிடிப்பால் இலை கண்ட தோட்டத்து அரசிகள் ஒரு தலையாய் இரு தலையாய் - மலரும்  காதல் கொணரும் மலராய் மலர்வதுண்டு  மலர்வதெல்லாம் கனிவதற்கே - பின் கவர்ந்து முகர்ந்து காதலாய் பசிந்து புசிந்து பின் எச்சமாய் எரிந்த பின் கொடி மரத்தின் வேரில் உயிர்பதே விதையும் விதையின் விரியமும் அமைந்தமையே அகிலத்தில்  அழகு பார் .