கோடை மழை
பாட்டினிற் வார்த்த
சூரரைப் போற்று
சொல்வதைப் போல
வெய்யோன் சில்லிகள்
வேர்க்க வைக்கின்றன
பொடி நடை கண்ட
பொற்தமிழரெல்லாம்
மனை தங்கியே
வினை செய்து
வருகின்றார்கள்
வானம் பார்க்கும்
மாந்தரெல்லாம்
மன்றாடுவது ஒரு
மாரிக்கு தானே
தோகை விரித்து
தோரணையாய் சிலிர்க்கும்
ஆண் மயில் ஆட்டம் காண
அணைத்துலகியரும்
ஆங்கங்கே
ஆதவனிடம் விண்ணப்பம் கோர்கிறார்கள்
கொட்டிவிடு
மாதவா
கோடை மழையாய் -நின்
கொடை மனம் கொண்டு -யாம்
குதித்து குத்தாட்டம் போட
எஞ்சிரு பாதம் கொண்டு....
கருத்துகள்
கருத்துரையிடுக