நவரஸா
கருவில்
உதித்து
உரு
கண்ட
என்
சிசுவின்
பொக்கை
வாய்
நகையும்
அசௌகரிய
அழைப்பின்
அழுகையும்
உதிரம்
மிகுந்த
இளிவரலும்
அது
கொணர்ந்த
உவகையும்
மாந்தர்
மகிழ்வின்
மனம்
புரியா
மருட்கையும்
அள்ளி
அணைக்கும்
அன்புகள்
உணரா
அச்சமும்-பின்
அன்பின்
இனம்
கண்ட
பெருமிதமும்
அண்டத்தில்
அணைத்தோர்
வசம்
செல்லும்
வெகுளியும்
பின்
சோர்ந்து
துயிலும்
அமைதியும்
அகிலம்
ஆளவிருக்கும்
என்
ஈஸ்வரியின்
நவரசங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக