இடுகைகள்

சொக்காய் சௌகரியங்கள்

படம்
பொக்கை வாய் கிழிசல்கள் பொத்தானை துருத்தி கொண்டு மெய் பொருந்தி நிற்பதால்  சொக்காயில் சில சௌகரியங்கள்

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .   

தாடிக்காரர்

படம்
ஆண் சாதி பெண் சாதி பிற சாதி சமாதி என சமத்துவம் சமைத்து சமூக நீதி காத்து கவைக்கு உதவா காரியங்கள் கருத்தில் தள்ளி நற்சிந்தை செய்து தையலெல்லாம் தொழில் செய்து தனம் பெற தளம் செய்த தாடிக்காரர் இவர்

புதிய பாதை

படம்
சக்கர சுழற்சியின்  சலிப்புகள்  எல்லாம்  கிளர்ந்து எழுந்து  தளர்கின்றன  தூசி துடைத்து  வண்ணம் பூசி  பூசை செய்து  புத்துயிர் கொண்டு  புது சரித்திரம்காண  புதிய பாதைகள்  பயணம் போகுது  இருமொழி புலமையில்  வாஞ்சை கொஞ்சம்  வசமாகி போனதனால்  வாழ்வு சிறக்குமென ஓர்  வசந்தகால பயணம்  பாதை காணுது  கருவிகள் கொண்டு  கருமங்கள் செய்தால்  காலத்தால் கனி  கனியும் என கனித்தோர் வாக்கில்  கருவிகள் பிடித்து  கருமங்கள் செய்திட  கால்களின் பயணம்  கனியும் கனியும்  கண்களை கவரும்  கருத்தும் சிறக்கும்  விரல்கள் தொடுக்கும்  வில்லின் அம்பினை  மாலையாக்கும்  மார்க்கம் ஊடே  இணையம் சிலிர்க்கும்  இனிமை பிறகும் 

பேரன்பின் பதிப்பு

படம்
தந்தை என்னும் ஆணின் பேரன்பில் மைய்யம் கொண்டு மகவாய் வரும் மகளெல்லாம் அந்த ஆணின் பெண் பதிப்புகளே.

பிழை

படம்
அகராதியில் சேர்க்க மறந்த பிழை உன் பெயர் ஆம் அழகென்ற சொல்லுக்கு உன் பெயரும் பொருளாகி போவதனால் அகராதியில் சேர்க்க மறந்த பிழை உன் பெயர்

நவரஸா

படம்
  கருவில் உதித்து உரு கண்ட என் சிசுவின் பொக்கை வாய் நகையும் அசௌகரிய அழைப்பின் அழுகையும் உதிரம் மிகுந்த இளிவரலும் அது கொணர்ந்த உவகையும் மாந்தர் மகிழ்வின் மனம் புரியா மருட்கையும் அள்ளி அணைக்கும் அன்புகள் உணரா அச்சமும் -பின் அன்பின் இனம் கண்ட பெருமிதமும் அண்டத்தில் அணைத்தோர் வசம் செல்லும் வெகுளியும் பின் சோர்ந்து துயிலும் அமைதியும் அகிலம் ஆளவிருக்கும் என் ஈஸ்வரியின் நவரசங்கள்