புதிய பாதை


சக்கர சுழற்சியின் 

சலிப்புகள்  எல்லாம் 

கிளர்ந்து எழுந்து 

தளர்கின்றன 


தூசி துடைத்து 

வண்ணம் பூசி 

பூசை செய்து 

புத்துயிர் கொண்டு 

புது சரித்திரம்காண 

புதிய பாதைகள் 

பயணம் போகுது 


இருமொழி புலமையில் 

வாஞ்சை கொஞ்சம் 

வசமாகி போனதனால் 

வாழ்வு சிறக்குமென ஓர் 

வசந்தகால பயணம் 

பாதை காணுது 


கருவிகள் கொண்டு 

கருமங்கள் செய்தால் 

காலத்தால் கனி 

கனியும் என

கனித்தோர் வாக்கில் 

கருவிகள் பிடித்து 

கருமங்கள் செய்திட 

கால்களின் பயணம் 


கனியும் கனியும் 

கண்களை கவரும் 

கருத்தும் சிறக்கும் 


விரல்கள் தொடுக்கும் 

வில்லின் அம்பினை 

மாலையாக்கும் 

மார்க்கம் ஊடே 

இணையம் சிலிர்க்கும் 

இனிமை பிறகும் 

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்