இடுகைகள்

பேரன்பின் பதிப்பு

படம்
தந்தை என்னும் ஆணின் பேரன்பில் மைய்யம் கொண்டு மகவாய் வரும் மகளெல்லாம் அந்த ஆணின் பெண் பதிப்புகளே.

பிழை

படம்
அகராதியில் சேர்க்க மறந்த பிழை உன் பெயர் ஆம் அழகென்ற சொல்லுக்கு உன் பெயரும் பொருளாகி போவதனால் அகராதியில் சேர்க்க மறந்த பிழை உன் பெயர்

நவரஸா

படம்
  கருவில் உதித்து உரு கண்ட என் சிசுவின் பொக்கை வாய் நகையும் அசௌகரிய அழைப்பின் அழுகையும் உதிரம் மிகுந்த இளிவரலும் அது கொணர்ந்த உவகையும் மாந்தர் மகிழ்வின் மனம் புரியா மருட்கையும் அள்ளி அணைக்கும் அன்புகள் உணரா அச்சமும் -பின் அன்பின் இனம் கண்ட பெருமிதமும் அண்டத்தில் அணைத்தோர் வசம் செல்லும் வெகுளியும் பின் சோர்ந்து துயிலும் அமைதியும் அகிலம் ஆளவிருக்கும் என் ஈஸ்வரியின் நவரசங்கள்            

குடைக்குள் மழை

படம்
. மழைத்துளி பாரம் மகளின் பூவிரலில் மய்யம் கொண்டபோது மகளுக்கு ஊறு  நேருமோ என குடைக்குள்  இழுத்த பின்னும் அப்பா மலப்பா அப்பா மலப்பா என ஆசை மகளின் எச்சில் பேச்சில் குடைக்குள்ளும் மழை

நவீன சந்தை மீதான தமிழ் சிந்தை

படம்
  சாமானியனிடத்தில்  சந்தைப்படுத்த  சுவரொட்டி மட்டும்  போதவில்லை இன்று  அழகாபுரத்து சாலையில்  பவனிவரும் அழகியெல்லாம்  சொகுசுகாரில் விரலுக்கு  சொடுக்கெடுத்து விட்டு  விரல் தேய  தொடுதிரையில்  தொலைந்து போகின்றார்கள்  இவர்களின்  மனம் கவர மணமுவந்த  மரக்காகித  கூழும்  மக்கிப்போய்  மண் சேர்கின்றன  இனி என்ன  இவர்களுக்கு இணைய உலகத்தில்  உலா வரும்  இளசுகளை  இனம் அறிந்து  மனம் கவர  சந்தை  இதிகாசங்கள்  இணையத்துடன்  இணைந்துவிட்டன  தட்டும் விரல்களை  தாவிக் கொண்டு  தபக்கென குதிக்கும்  தரவரிசை முடிவுகளுக்குள் தடகள ஆட்டமே  நடக்குது இங்கே  சந்தை பொருளை  விந்தை செய்து  சிந்தை சேர்த்து  சில்லறை சேர்க்க சமூக ஊடகம்  சேவை செய்யுது  மிகைப்படுத்தி  முன்வைக்கப்பட்ட  மின்னஞ்சல்கள் சில முக்கோண பணிக்கூழை  முன்வைத்து மூக்கொழுகளை  முன் நிருத்தி  கைக்குட்டையையும்  கைதுருத்தி போகுது  ஆயிரம் ஆயிரம்...

கர்ம வினைகள்

படம்
கபால ஓட்டினுற்  கருவி கொணரும் கருத்துகள் யாவும் காகிதம் வழி களம் சேர்த்து ஜனம் கவர்ந்து  மனக்கொள்ளை செய்து சாயக் கோலமாய் சமணமிட்டு கொள்ளுதல் கருத்துடையோன் செய்யும் கர்ம வினைகள்

கள்வனின் காதலன்

படம்
அண்டத்தில் அகம் கொண்ட அம்மாக்களின் பிள்ளைகள் அனைவரும் அன்பிலும் அறிவிலும் ஆழ்ந்து தேர்ந்து அன்னைத் தமிழ் வழி சிந்தை செய்து  கன்னியின்பாற்  காதல் கொள்ளும் காதலை போன்றே கள்வனின் குணத்தோடும் அவன் சினத்தோடும் கள்வனின் நடையோடும் அவன் உடையோடும் கள்வனின் வீரத்தோடும் அவன் கை சட்டை மடிப்போடும் கள்வனின் காந்த துடிப்போடும் அவன் கள்ள சிரிப்போடும் கள்வனின் உழைப்போடும் அவன் காதலியின் காதலோடும் கள்வன் செய்யும் அவன் பிள்ளை காதலோடும் காதலாகி நம்மையெல்லாம் அவனாகி போதல் அவனதிகாரம்