கள்வனின் காதலன்
அம்மாக்களின் பிள்ளைகள்
அனைவரும்
அன்பிலும் அறிவிலும்
ஆழ்ந்து தேர்ந்து
அன்னைத் தமிழ் வழி
சிந்தை செய்து
கன்னியின்பாற்
காதல் கொள்ளும்
காதலை போன்றே
கள்வனின் குணத்தோடும்
அவன் சினத்தோடும்
கள்வனின் நடையோடும்
அவன் உடையோடும்
கள்வனின் வீரத்தோடும்
அவன் கை சட்டை மடிப்போடும்
கள்வனின் காந்த துடிப்போடும்
அவன் கள்ள சிரிப்போடும்
கள்வனின் உழைப்போடும்
அவன் காதலியின் காதலோடும்
கள்வன் செய்யும் அவன்
பிள்ளை காதலோடும்
காதலாகி நம்மையெல்லாம்
அவனாகி போதல்
அவனதிகாரம்
கருத்துகள்
கருத்துரையிடுக