தேடல்
அதிகாலை அவசரமாய்
அயலூர் செல்ல
ஆயத்தமாக
அலுவல் கோப்புகள்
தேடி எடுக்க
அலமாரி
அடுப்பங்கரை
மேசை
கட்டில்
தொட்டில்
இண்டு
இடுக்கு
என
தேடி
ஓயும் வேலையில் ,
நீண்ட நாள்
தேடுதலாய்
இருந்த
இளையராஜா
மெல்லிசை
குறுந்தகடு,
குக்கர் வெய்ட் ,
செவி பேசி ,
காஜல் கண்மை ,
உதட்டு சாயம் ,
பச்சை துண்டு ,
பத்து ரூபாய்
பவளமணி ,
நட்சத்திர பொட்டு,
நோக்கியா பேட்டரி என
வரிசைகட்டி
கண் முன்
காண
பெறுவதெல்லாம்
தேடலின் வரங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக